பக்கம்:நூல் நிலையம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நூல் நிலையம்

போல இந்த நூல் தொகுதியினேயும் பெட்டியினுள் அடங் கும் அடக்கமான நூலகம் என்று கூறலாம். இத்தகைய ஆாலகங்களுக்குத் தனித்தனியாகப் புத்தகப் பட்டியலும், பதிவு எண்ணும் தரப்படுகின்றன. ‘அ’ எண்ணுள்ள பெட்டி கிளே நூலகத்திற்கு அனுப்பப்பட்டால் அப் பெட்டி திரும்பிவந்த பிறகுதான் 'ஆ' எண்ணிட்ட நூலகம் மீண்டும் அனுப்பப்படும். இங்ங்னம் சுற்றி வரும் நூலகங் களால் காட்டில் பெரும் பயன் விளையும். சொந்தமாக ஊர்தி வைத்துக்கொண்டு, இவைகளை அனுப்ப முற்படுவ கைக் காட்டிலும், புகை வண்டிப் போக்கு வரத்து பெரு கலம் பயப்பதாகும். சிற்றுார்களிலும் பேரூர்களிலும் கிளே நூலகங்கள் பரவிக் கிடப்பதால், முற் குறிப்பிட்ட முறை எளிதில் பெட்டி நூலகங்களை அனுப்ப வாய்ப்பளிக்கின் றது. அனுப்பப்படும் பெட்டியின் மீது அச்சிட்ட தாளே ஒட்டி, முகவரியினைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அனுப்பப்பட்ட நூற்கள் பயன்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னல் மீண்டும் நூற்களை அனுப் புதல் நன்றன்று. புத்தக எண்ணிக்கைக்கும், மக்கள் மன வளத்திற்கும் ஏற்பப் பெட்டி நூலகத்தினைப் பயன்படுத்து வதற்குரிய காலத்தைத் தலைமை நூலகம் ஆராய்ந்து குறிப் பிடுகின்றது. எடுத்துக்காட்டாக நூறு புத்தகங்கள் அடங் கிய பெட்டி அனுப்பப்படுகிறதென்ருல் மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். நாம் முன்னரே குறிப் பிட்டதுபோலத் தலைமை நூலகம்,கிளை நூலகங்களைப்பயன் படுத்தும் மக்கள் கருத்திற்கேற்ப, காலத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். புத்தகங்கள் திருப்பி அனுப் பப்பட்ட பிறகு அவைகளேத் தலைமை நூலக அலுவலகம் சரி பார்த்துப் பதிவு செய்கின்றது. புள்ளி விவரக்கணக்கிற் காக இவ்வாறு செய்யப்படுகின்றது புத்தகங்கள் காணு மற் போனலும், பாழ்பட்டாலும், அதற்குரிய விளக்கங் கள் கராது போனலும் அவைகளைப் பற்றியும், அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/81&oldid=589861" இலிருந்து மீள்விக்கப்பட்டது