பக்கம்:நூல் நிலையம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி "I 3

ஆாலகத்துறை அதிகாரியைப் பற்றியும் உரிய அதிகாரி களுக்குத் தெரிவித்து விடவேண்டும்.

உள்ளுர் நூலகக் குழுவினரும், உள்ளுர் நூலக அதி காரிகளும், மாவட்ட் நூலகத்துறை அதிகாரியும் (Dt. Librarian) தொடர்பு கொள்வது இன்றியமையாததாகும். அந்தத் தொடர்பால் தான் நூலகத்துறையில் நல்ல முடிவு களே காம் காணமுடியும். மாவட்ட நூலகத்துறை அதிகாரி அந்தத் தொடர்பை விரிவு படுத்திக்கொள்ள, சிற்றுார் பேரூர்களில் விளங்கும் கிளை நூலகங்களுக்குச் சென்றும், உள்ளுர் நூலகக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொண் டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களிடையிலே நூல கத்துறை அதிகாரி நெருங்கிப் பழகுவதின்மூலம், மக்கட் குத் தேவையான நூல்களைப் பற்றியும், நூலகம் பயன்பட வேண்டிய முறைகளைப் பற்றியும், கேட்டறிந்து நூலகத் துறை வளர்ச்சிக்கு ஆவன செய்தல் முடியும். ஒவ்வொரு இடத்தைச் சேர்ந்த மக்களுக்கும் ஒவ்வொரு விதமான மன உணர்வு இருத்தல் உலக இயல்பு அதை அறிந்துகொண்டு மக்கள் மன உணர்விற்கேற்ப நூலகத்தை விரிவு படுத்த வேண்டும். சிற்றுார்களில் நூலகங்களை ஏற்படுத்துவதோ டமையாது எழுதப் படிக்க மக்கள் அறிந்துகொள்ள வேண் டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்யவேண்டும். பேரூர் களில் வேண்டுமானுல் இந்தப் பிரச்சாரம் தேவையற்றதா யிருக்கலாம். கல்வித் துறையில் இருண்டு கிடக்கும் இந்தி யாவில் நாற்றுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு பேர்தான் படித்தவர்கள். இங்கிலேயில் அறிவுத்துறை வளர்ச்சிக்குச் சிற்றுார்களில் பிரச்சாம் பரந்த அளவில் வேண்டப்படுகின் றது. அந்தப் பணியினல் கல்லாமை என்னும் பிணி போக் கப்படும்; அறியாமை என்னும் மூடுபனி விலக்கப்படும் பொழுது போக்கிற்காக மட்டுமன்றி அறிவு வளர்ச்சிக்கு அரிய வழி காட்டியாகவும் நூலகம் விளங்குகிறது என்று மக்கள் எண்ணி அறிவாலயத்தின்மூலம் அன்பு கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/82&oldid=589862" இலிருந்து மீள்விக்கப்பட்டது