பக்கம்:நூல் நிலையம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நூல் நிலயம்

ஒழுகப் பண்ணுவது மாவட்ட நூலக அதிகாரியின் செயலாகும்.

ஊர்க்கிளே நூலகங்களின் குழுக்கள் தங்கள் கருத்துக் களையும், முடிவுகளையும் அவ்வப்போது தலைமை நூலக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட காலங் களில் கிளை நூலகங்கள் தங்கள் கருத்துக்களை அறிக்கை களாகத் தருதலும் சில இடங்களில் உண்டு. சில நேரங் களில் தலைமை நூலக அலுவலர்களேகூட கிளை நூலகங் களே அறிக்கை அனுப்புமாறு கேட்பதும் உண்டு. அந்த அறிக்கை, நூலகம் பயன்படும் முறைகளையும், ஆலோசனை களையும், மக்கள் விரும்பும் நூல்களையும், அவர்கள் விரும் பும் கருத்துக்களையும், கல்வி வளர்ச்சிக்காக நூலகம் உதவி புரியக்கூடிய நிகழ்ச்சி இருந்தாலதனையும் குறிப்பிடல் வேண்டும். சுருங்கச் சொன்னல், ஒவ்வொரு குழுவும் தாங் கள் புரிகின்ற பணி தங்கள் பகுதிக்கு மட்டும்தானென்று எண்ணுமல் பொதுவான நூலக வளர்ச்சித் துறைக்கே தங்கள் பணி அழகிய அணியாகும் என்று எண்ணி ஓயாது உழைக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/83&oldid=589863" இலிருந்து மீள்விக்கப்பட்டது