பக்கம்:நூல் நிலையம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உலகில் பெரிய நூலகங்கள்

1. முதல் தேசீய நூலகம்! (ஐரோப்பாவில்)

பிரெஞ்சு நாட்டின் அரசாங்க நூலகமாக இருந்த “லாபிப்ளியோதெக்கேசனேல்' என்ற நூலகம் கி. பி. 1480ல், 11-ஆம் லூயி மன்னன் காலத்தில் தேசிய நூலக மாக அமைக்கப்பட்டது. இந்நூலகத்தின் பிற்கால வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த பெரியார்கள் அப்பெக் னன், மன்னன் நெப்போலியன் ஆவார்கள். 1741 வரை இந்நூலகத்தின் தலைவராயிருந்த அப்பெக்னன், எல்லா மக்களும் இந்நூலகத்தினேப் பயன்படுத்துதற்குரிய வாய்ப் பினே அரசாங்கம் வழங்கியதற்குக் காரணமாயிருந்தார். 1735ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் பிரபுக் களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் பயன்பட்டு வந்த நூலகம் பொது மக்கள் நூலகமாக மாறியது குறிப் பிடத்தக்க செய்தியாகும்.

மன்னன் நெப்போலியன் இந்நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின்ை. அரசாங்கம் இந்நூலகத்திற்கு வழங் கிய கன்கொடையினே அதிகப்படுத்தினன். புத்தகம் இர வல் வாங்குவோர் முன்பணம் கட்டவேண்டும் என்ற விதி யினேக் கடுமையாகக் கடைப்பிடிக்கும்படிச் செய்தனன். மேலும் உயர்ந்த நூற்கள் அனைத்தும் தன்னட்டுத் தேசிய நூலகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பி அதற்கு ஆவன செய்தனன்.

1818ம் ஆண்டு இந்நூலகத்தில் எட்டு லட்சம் நூற். கள் இருந்தன. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் இந்நூலகம் மன்னனுக்குச் சொந்தம் என்பது மாறி மக்கள் நூலகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/84&oldid=589864" இலிருந்து மீள்விக்கப்பட்டது