பக்கம்:நூல் நிலையம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 நூல் நிலையம்

மாறியது. கி. பி. 1854ல் இப்பொழுதிருக்கும் நூலகக் கட்டிடம் கட்டத் திட்டம் தீட்டப் பெற்றது. நூலக நண்பர்கள்' என்ற பிரெஞ்சு நாட்டுக் கழகமும், இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டது முதல் உலகப் போருக்குப்பின் பொருளாதார நெருக்கடி எற்பட்ட காலத்து இக்கழகத்தார் தங்கள் இரத்தத்தினே மருத்துவக் கூடங்களுக்குக் கொடுத்து அதனுற் கிடைத்த பொருளினை இந்நூலக வளர்ச்சிக்குப் பயன் படுத்தினர்கள் என்ற வரலாறு எந்த நாட்டிலும் இதுவரை நடைபெருத ஒரு சிறந்த நிகழ்ச்சியாகும். இது ஒன்றே பிரெஞ்சு நாட்டு மக்களின் பேருள்ளத்திற்கும் நூலக வளர்ச் சிக்காக வேண்டி அவர்களுக்கிருக்கும் ஆர்வத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். பிரெஞ்சு காட்டிற்ருன், முதன் முதலில் பதிப்பகங்கள் தாங்கள் வெளியிடும் புத்தகங்களைப் பதிவு செய்யும் முறை கி. பி. 1627-ல் ஏற்பட்டது. இன்று பிரான்சு நாட்டின் தேசிய நூலகத் தில் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங் களும், ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட கையெழுத்துச் சுவடிகளும், நாலரை லட்சத்திற்கு மேற்பட்ட பதக்கங் களும் நாணயங்களும், ஐம்பது லட்சத்திற்கு மேற்பட்ட சித்திரங்களும் சிற்பங்களும், ஐந்து லட்சத்திற்கு மேற் பட்ட செய்தி இதழ்களின் தொகுதிகளும், கான்கு லட்சம் காட்டுப் படங்களும் உள்ளன. மேலும் இந்நூலகத் தலை வரின் மேற்பார்வையிற்ருன் பிரெஞ்சு நாட்டு எல்லாப் பொதுமக்கள் நூலகங்களும் உள்ளன. கல்வி அமைச் சரின் ஆனேக்கு உட்பட்டு நடக்கும் நூலகங்களுக்கு எல் லாம்கூட இவர்தான் தலைவர் ஆவார். (Director of Public Libraries). மேலும் பொதுமக்கள் நூலகங்கள் ஒன்றிற்கொன்று நூற்களைக் கடன் வாங்கிக்கொள்ளும் முறையும் இக்காட்டில் நடைமுறையில் உள்ளது. ஆராய்ச்சியாளர்க்குரிய வசதிகள் அனைத்தும் தேசீய நூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/85&oldid=589865" இலிருந்து மீள்விக்கப்பட்டது