பக்கம்:நூல் நிலையம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 77

கத்தில் செய்து தரப்பட்டுள்ளன. பறநாட்டு நூலகங்களி லிருந்து அவர்களுக்கு வேண்டிய நூற்கள் வரவழைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2. இலெனின் நூலகம்.

இலெனின் கிராடிலுள்ள (Leningrad) கொசு தார்சு வென்னச பப்ளிக்னச பிப்ளியோதெகர்' என்ற நூலகம்தான் உருசிய நாட்டின் பழமையான நூலக மாகும். இந்நூலகம் கி. பி. 18-ம் நூற்ருண்டில் "இம்பீரியல் பொது நூலக”மாக மாறியது. காதெரின் அரசியாராற் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் இப்புது நூலகம் திறக்கப்பட்டது. *

கி. பி. 1794-ல், உருசியர்கள் போலந்து நாட்டை வெற்றி கண்டபொழுது, “கவுண்ட் சுலுஸ்கி' என்ற போலந்து நாட்டுப் பெரியார் தம் நாட்டிற்குக் கொடுத் திருந்த நாலு லட்சம் நூற்களையும் எட்டுச் சுவடிகளையும் உருசியர்கள் செயின்ட் பீட்டர்சுபர்க்கிற்குக் கொண்டு சேர்க்க முடிந்தது. பல நூற்கள் வழியில் தொலைந்து போயின. கொண்டுவந்த நூற்கள்தான் உருசியர்கள் ஒரு பொது நூலகத்தினேப் பீட்டர்சு பர்க்கில் திறப்பதற்குப் பெரிதும் காரணமாக இருந்தன. மேலும் 'டுப்ரோவிசுக்கி" என்ற பெரியார் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களும் இந்நூலகத்திற்காக விலை கொடுத்து வாங்கப்பட்டன. டுப்ரோவிசுக்கி என்பவர் பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரான்சில் இருந்த உருசியத் தூதுவர்களில் ஒரு வர் ஆவார். பிரெஞ்சுப் புரட்சியின்போது 'செர் மயின்” மடமும், பேசிடில் சிறைச்சாலைக் கோட்டை யும் நெருப்பிற்கு இரையாயின. அதுகாலேடுப்ரோ விசுக்கி அங்கிருந்தபல அருமையான நூற்களையும் ஏடுகளையும்கைப் பற்றித் தம் தாய்நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/86&oldid=589866" இலிருந்து மீள்விக்கப்பட்டது