பக்கம்:நூல் நிலையம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நூல் நிகிலயம்

பின் தம் அரசாங்கத்திற்கு அவைகளை எல்லாம் விற்று விட்டார்.இவ்வாறு இம்பீரியல் நூலகம் வளரலாயிற்று.

கி. பி. 19-வது நூற்ருண்டில் உருசியப் போரில் நெட் போலியன் வெற்றிகண்டபொழுது இந்நூலகத்திலிருந்து ஒன்றரை லட்சம் நாற்கள் பாரிசு நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. எனினும், சில ஆண்டுகளில் மீண்டும் இந்நூலகம் தலைசிறந்து விளங்குவதாயிற்று. கி. பி. 1849-ல் மாடசுட் கார்ப் என்பவர் நூலகத் தலைவராய்ப் பதவியேற்று இந்நூலக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடு பட்டார். நூலகத்தினேப் பல பகுதிகளாகப் பிரித்தார். நூற்பட்டியலொன்று தயாரிக்கப்பட்டது. அரசாங்க நன்கொடையினே அதிகப்படுத்த ஆவன செய்தார். இலண் டன் நூலகத்தினைப் போன்று வட்ட வடிவமான படிப் பகத்தினைக் கட்டச் செய்தார். செய்தி இதழ்களின் வாயி லாக இங்,நாலகத்தின் அருமை பெருமைகளே மக்கள் உன ரும்படிச் செய்தார். உலகினேயே கடுங்கச்செய்த உருசியப் புரட்சியின் காரணமாக இந்நூலக வளர்ச்சியிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அரச குடும்பத்தினரிடமிருக் தும், சமயக் கழகங்கள், மடங்களிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட நூற்களும் இந்நூலகத்துடன் சேர்க்கப் பட்டன.

போலந்து காட்டிற்கு விடுதலை கிடைத்தவுடன், அங் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டபுத்தகங்கள் அனைத்தும் அங்காட்டிற்கே கொடுக்கப்பட்டன. உருசியப் புரட்சிக்குப் பின், மாஸ்கோ நகர் சிறப்புப் பெற்றதால் பீட்டர்சுபர்க் கில் இருந்த தேசீய நூலகம் மாஸ்கோவிற்கு மாற்றப்பட் டது. இன்று இந்நூலகம் இலெனின் நூலகம்’ என்று வழங்கப்படுகிறது. கி. பி. 1862-ல்28,612 நாற்களே இந்நூ லகத்திலிருந்தன. 1917-ல் பத்து லட்சம் புத்தகங்களாயின; 1930-ல் காற்பத்தெட்டு லட்சங்களாயின. இன்று இந்நூ ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/87&oldid=589867" இலிருந்து மீள்விக்கப்பட்டது