பக்கம்:நூல் நிலையம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 79

கத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் புத்தகங்களும், இரு பத்தைந்து லட்சம் கையெழுத்துச்சுவடிகளும்,பத்து லட்சம் துண்டுப் பிரசுரங்களும் உள்ளன. பல மொழிகளிலும் எழுதப்பட்ட புத்தகங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்நூல கத்தில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ நூற்றைம்பது மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன.

உலகில் பெரிய நூலகம் எதுஎன்பதில் அமெரிக்க நாட் டுக் காங்கிரசு நூலகத்துக்குப் போட்டியாக விளங்கும் இக் நூலகத்திற்கு நாடோறும் 1500-க்கு மேற்பட்ட மக்கள் வந்துசெல்லுகின்றனர். எண்ணிறந்த மக்கள் இங்கு பணி யாற்றுகின்றனர். கி. பி. 1949-ஆம் ஆண்டு தரப்பட்டிருக் கும் கணக்கின்படி அவ்வாண்டு இந்நூலகத்தினின்று பதி னேந்து லட்சம் புத்தகங்களை மக்கள் எடுத்துச் சென்று பயன்படுத்தியுள்ளனர்.

இந்நூலகக் கட்டிடம் ஒன்றரை பர்லாங்கு நீளமுள் ளது; பல மாடிகளைக் கொண்டது. இத்தகைய பெரிய நூலகத்தில் தமிழ் நூற்களும் இடம் பெற்றிருக்கின்றன என்று அறியும்போழ்து தமிழர்களாகிய நாம் பெருமிதம் கொள்ளவேண்டியவர்களாகின்ருேம் !

3. கர்ங்கிரசு jTsosio (Library of Congress)

இந்நூலகம் கி. பி. 1800-ல் அமெரிக்கக் காங்கிரசு சட்டத்தின்படி, காங்கிரசு உறுப்பினர்களுக்காகவும்மக்கள் அவை உறுப்பினர்களுக்காகவும், மக்கள் அரசியலவைக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது. முதலாண்டிலேயே 5000 பவுன்கள் செலவழித்து, மக்கள் அவை உறுப்பினர், காங் கிரசு உறுப்பினர் இவர்களுக்குப் பயன்படக்கூடிய நூல் கள் வாங்கப்பட்டன. இரண்டாண்டுகளுக்குப் பின் சட்ட சபையின் ஒப்புதலின் பேரில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நூலகத் தலைவர் ஒருவரை நியமித்தார். மூவாயிர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/88&oldid=589868" இலிருந்து மீள்விக்கப்பட்டது