பக்கம்:நூல் நிலையம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நூல் நிலையம்

திற்கு மேற்பட்ட நூல்களைக்கொண்டிலங்கிய இந்நூலகம் கி. பி. 1814-ல் வளம் நிறைந்த வாசிங்டன் நகர் எதிரிக ளால்எரியூட்டப்பட்டபொழுது அழிந்தது. எனினும் பல ரதுமுயற்சியின் பயனல் அடுத்த முப்பதாண்டுகளில் அழிக் தொழிந்த காங்கிரசு நூலகம், மறுபடியும் தலையெடுத்து விளங்கியது. கி. 1851-ல் மறுபடியும் இந்நூலகம் இயற்கை யின் சீற்றத்திற்கு இரையாகியது. இயற்கையாகவே ஏற் பட்ட நெருப்பின் காரணமாய் 35,000 புத்தகங்கள் அழிக் தன; 20,000 புத்தகங்கள் எஞ்சியவை.

|

கி. பி. 1887ல், மூன்றே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் 6,347,000 டாலர் செலவில் இந் நூலகத்திற்கென்று தனிக் கட்டிடமொன்று கட்டப்பட்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய நூலகக் கட்டிடமாகும் கி. பி. 1800ல் மக்கள் அவைக் கட்டிடத்தில், செபர்சன் என்ற அமெரிக்கக் குடி யரசுத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நூலகம், பல இன்னல்களை எல்லாம் அடைந்து, இறுதியில் 40 லட்சம் புத்தகங்களோடு கி. பி. 1897ல் புவியினரால் புகழ்ந்து பேசப்படும் புதுக் கட்டிடத்திற்கு மாறியது. காங்கிரசு உறுப்பினர்களுக்கும், சட்டசபை உறுப்பினர்களுக்காக வுமே விளங்கிய இந்நூலகம் கி. பி. 1939ல் பொதுமக்களுக் குரிய நூலகமாக மாறியது, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும். மேலும் மக்கள் அவையினரால் கொண்டுவரப்பட்ட அமெரிக்கச்சட்டத்தி ல்ை இந்நூலகம், அமெரிக்கப் பதிப்பகங்கள் அனைத்தும் தாங்கள் வெளியிடும் நூல்களனைத்தையும் பதிவு செய்யும் (Copy Right Office)அலுவலகமாகவும் மாறியது. நூலகத் துறைத் தலைவருக்கு உட்பட்ட பதிப்பக உரிமையினைப் பதிவு செய்யும் தலைமை அலுவலரை (Registrar) நியமிக் கவும் சட்டசபை அனுமதியளித்தது. இத் திட்டம் இங் நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றது. பதிப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/89&oldid=589869" இலிருந்து மீள்விக்கப்பட்டது