பக்கம்:நூல் நிலையம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 81

கத்தராால் அனுப்பப்படும் புத்தகங்கள் அனைத்தும் இங் நூலகத்தில் இடம் பெறுகின்றன.

கி. பி. 1940-41ல் அமெரிக்கக் காங்கிரசு 3 மில்லியன் டாலர்களை இந்நூலக வளர்ச்சியின் பொருட்டு வழங்கி யமை, இந்நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தது. 1941 ஆம் ஆண்டு தரப்பட்டிருக்கும் கணக்கின்படி, துண்டுப் பிரசுரங்கள் - புத்தகங்களின் தொகுதிகள் 65 லட்சமும் சிறப்புக் காட்சிகள் நாட்டுப் படங்களின் தொகுதிகள் 12, லட்சமும் ஆகும். மேலும் 1,400,000 இசைத் துணுக்குகளும் இடம் பெற்றிருந்தன. புத்தக அலமாரிகளின் மொத்த நீளம் 414 மைல்களாகும். காண் போர் கருத்தைக் கவரும் வகையில் உயர்ந்து விளங்கும் காங்கிரசு நூலகத்தில், ஒரே நேரத்தில் 300 மக்கள் இருந்து படிப்பதற்குரிய வசதிகளுடன் கூடிய முப்பது படிப்பகங் களும், எல்லா வசதிகளும் கிரம்பிய 200 ஆய்வுக் கூடங் களும் இருப்பது வியக்கத்தகு செய்தியாகும்.

16 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்நூலகத்திற்கு வருவதற்குரிய தகுதி உடையவர்கள் என்றும், ஒவ்வொரு வாரத்திலும் ஞாயிற்றுக் கிழமை சிறந்த நாளர்குமென்றும் அன்று 2000-க்கு மேற்பட்ட மக்கள் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர் என்றும் அமெரிக்கச் செய்தி இதழ் ஒன்று கூறுகின்றது. நூலகக் கூட்டுறவு முறைக்கு இந்நூலகம் இன்று சிறந்த எடுத்துக்காட்டாய் இலங்குகின்றது. அமெரிக்க நாட்டுப் பல பெரிய நூலகங்களின் கூட்டுற வில்ை காங்கிரசு நூலகம் தயாரித்துள்ள பொது நூற் Lilliq-u?oor apavuorii (union catalogue) arouqjih Grägto புத்தகத்தினையும் எங்கிருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். எல்லா நூலகங்களுக்கும் இந்நூலகத்திலிருந்து புத்தகங் கள் கடகை அனுப்பப்படுகின்றன. கையெழுத்துச் சுவடி களிலிருந்தும் சில அரிய நூல்களிலிருந்தும் ஒரு சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/90&oldid=589870" இலிருந்து மீள்விக்கப்பட்டது