பக்கம்:நூல் நிலையம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நூல் நிலையம்

பகுதிகளே மாத்திரம் பெற விரும்புகின்றவர்கள் காங்கிரசு நூலகத்திற்கு எழுதினல் அங்கு அப் பகுதிகள் படமெடுக் கப்பட்டு சுருள் படமாக அனுப்பப்படுகின்றன. அதற் குரிய செலவுத் தொகையினே நாம் அனுப்பி விடுதல் வேண்டும். இந்நூலகத்தின் மற்ருெரு சிறந்த செயல் கண்ணில்லா மக்களுக்குச் செய்யும் தொண்டாகும். அவர் களுக்கென்று ஊற்றெழுத்துக்களாலாய நூற்கள் ஆண்டு தோறும் வெளியிடப் Iடுகின்றன. இதற்காக அரசாங்கம் ஆண்டிற்கு 100,000 பவுன்கள் செலவிடுகின்றது. மேலும் பேசும் நாற்பதிவுகள் தயாரிப்பதற்கு 250,000 பவுன்கள் வருடந்தோறும் செலவழிப்பதற்கு நூலகச் சட்டம் இடக் தருகின்றது. இத்துடனில்லாது 5000 க்கு மேற்பட்ட காடோடிப் பாடல்களே ஒலிப்பதிவு செய்து மக்களுக்கு மலிவான விலைக்குக் கொடுக்கின்றனர்.

ஒரு நூலகத் தலைவரும், சில பணியாட்களுமே வேலை செய்த காங்கிரசு நூலகத்தில் இன்று ஒன்பதிற்கு மேற் பட்ட நூலகத் தலைவர்களும், ஒரு நூலகத் துறைத் தலைவரும் 1500 பணியாட்களும் பணி புரிகின்றனர். தற்பொழுது இந்நூலகத்தின் துண்டுப் பிரசுரங்கள், நூற் களின் தொகுதிகள் 90 லட்சமும் கையெழுத்துச் சுவடி களின் தொகுதிகள் கோடியே 19 இலட்சத்து 70 ஆயிர மும் இசைத் துணுக்குகளின் தொகுதிகள் 19,81,000 மும் இசைத் தட்டுகள் 122, 134 ம், அசையும் படக் காட்சிப் படச் சுருள்கள் 11,955 ம், சித்திரங்களின் தொகுதிகள் 575,083-ம், ஒளி நிழற் படங்களின் தொகுதிகள் 936,412-ம் ஆகும். --

s அமெரிக்க நாட்டு அரசியல் பத்திரங்கள், அரசியல் உரிமை வெளியீடு, அரசியல் செயல் வகைகள், அரசியலறி ஞர்களது கையெழுத்துச் சுவடிகள் இவை அனைத்தும் இந்நூல்கத்தில் வைக்கப்பட்டுள்ளதால் காங்கிரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/91&oldid=589871" இலிருந்து மீள்விக்கப்பட்டது