பக்கம்:நூல் நிலையம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலகம் ஆசியப் பெரு நூலகங்களில் ஒன்ருகவும் எண்ணப்படுகின்றது. இந்திய நாட்டுக் கவர்னர் செனரல் களில் ஒருவரான கர்சன் பெரு மகனரால் கி. பி. 1903 ம் ஆண்டு சனவரி மாதம் முப்பதாவது நாள் கல்கத்தா நகரில் தொடங்கப்பட்ட இம்பீரியல் நூலகமே, தற்பொழுது நமது நாட்டின் மிகப்பெரிய தேசீய நூலகமாக விளங்குகின்றது.

கி. பி. 1835 ல் கல்கத்தாவில் வாழ்ந்த அறிஞர்களிற் சிலர் ஒன்று கூடி நூலகம் ஒன்றினைத் திறப்பதற்குத் திட்டம் தீட்டியதோடமையாது. டாக்டர் கிராண்ட் என்ற பெரியார் இல்லத்தில் கி. பி. 1836 ல் ஒரு பொது நூலகத் தினைத் திறந்தனர். இந்நூலகத்தினைத் தோற்றுவித்தவர் இளவரசர் துவாரகநாத் தாகூர் ஆவர். கி. பி. 1891 ல் கர்சன் பிரபு கல்கத்தா மாநிலச் செயலகத்தார் நூலகங் களையெல்லாம் ஒன்று சேர்த்து இம்பீரியல் நூலகத்தை ஏற்படுத்தவே கல்கத்தா பொது நூலகம் இந்நூலகத் தோடு இணைக்கப்பட்டது. கர்சன் பெருமகனரால் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி எல்லா அரசாங்க நூலகங்களும் இந்திய அரசாங்கத்தின் கீழ் வந்தன. மேலும் இம்பீரியல் நூலகமானது பொதுமக்கள் நூலக மாக மாறியது. மாக்ஃபர்லேன் என்பவர் முதல் நூலகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசாங்க ஆதரவிலும் வைசிராயின் பாதுகாவலிலும் இந்நூலகம் வளர்ந்ததால் இந்திய நாட்டில் வெளியிடப்பட்ட அத்தனை அரசாங்க வெளியீடுகளும் இந்நூலகத்தில் இடம் பெற்றன. அச்சகப் பதிவுச் சட்டத்தில்ை (Pressact) வங்காளத்தில் வெளியான இலக்கியங்களெல்லாம் இந்நூலகத்திற்கு அனுப்பப்பட்டதால் இந்நூலகம் விரைவிற் சிறந்த தொரு நூலகமாக விளங்கலாயிற்று.

கி. பி. 1949 க்கு முன் இந்நூலகம் ஒரு நிலையான கட்டிடத்தில் இருந்ததில்லை. கி. பி. 1902 லிருந்து மெட்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/93&oldid=589873" இலிருந்து மீள்விக்கப்பட்டது