பக்கம்:நூல் நிலையம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 85

மண்டபத்தில் விளங்கிய இந்நூலகம் கி. பி. 1923 ல் கல்கத்தா மாநிலச் செயலகத்தார் க ட் டி ட த் தி ல் இருந்த அயல்நாட்டு இராணுவத்தினர் இருந்த பகுதிக்கு மா ற் ற ப் ப ட் ட து. இரண்டாம் உலகப் போர் நடக்கும்போது கி. பி. 1942 ல் இந்நூ லகம் அா ட/IT குசும் கட்டிடத்திற்கு மாறியது. ஆனல் கி. பி. 1948 ல் மறுபடியும் பழைய கட்டிடத்திற்கே வந்தது. 29000 சதுர அடி பரப்புள்ள இக் கட்டிடத்தில் விளங்கிய நூலகம் நாடோறும் வளர்ந்து பெரிதாகவே இடம் காணுமையால் கி. பி. 1949 ல் இன்று இந்நூலகம் இருக்கும் பெல்வடீர்? Fl-14-1=#$.bg (Belvedere Mansion) Loir,b,půl ul_Goi, அன்று தொட்டு மக்கள் இம்பீரியல் நூலகத்தினை பெல் வடீர் நூலகமென்று வழங்கலாயினர். இன்றைய நூலகக் கட்டிடம் அமைதியும் அழகும் ஒருங்கே அமைந்த இடத் தில் பூத்துக் குலுங்கும் பூங்காவின் மத்தியில் எழில் பெற விளங்குகின்றது. கல்கத்தாவிலிருந்து ஆண்ட வைசிராய் கள் அனைவரும் இக் கட்டிடத்தில்தான் தங்கி இருந்தன ரென்றும், நம் காட்டின் முதல் கவர்னர் செனரலான வாரன் ஹேஸ்டிங்சு இங்கு சில காலம் வாழ்ந்தாரென்றும், கி. பி. 1780 ல் மேசர் பாலியால் இக் கட்டிடம் வாங்கப் பட்டதென்றும், பின் கி. பி. 1854 ல் கிழக்கிந்தியக் கம்பெனியார் 60,000 ரூபாய்க்கு இதனை வாங்கினரென்றும், 1912 வரை வங்காள கவர்னர்கள் மாதமொன்றிற்கு ரூ 500 கொடுத்து இங்கு வாழ்ந்து வந்தனரென்றும், சில காலம் சிறப்பு மிக்க சித்திர-சிற்ப மண்டபமாய். இக் கட்டிடம் விளங்கிய தென்றும் வரலாறு கூறுகின்றது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக் கட்டிடம் ‘சூரட் நதியின் வாராவதியை நோக்கி அமைந்துள்ளது. நெடிய சன்னல்கள் பல இருப்பதால் இயற்கை வெளிச்ச மும் காற்றும் இக் கட்டிடத்தில் அதிகம். சர் ஆண்ட்ரூக் ரேசர் கட்டிய நடன மன்றம் இன்று நூலகத்தின் முக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/94&oldid=589874" இலிருந்து மீள்விக்கப்பட்டது