பக்கம்:நூல் நிலையம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நூல் நிலையம்

பகுதியாய் விளங்குகின்றது. இம் மன்றத்தின் இரு மருங் கிலும் சுவரில், பல துறையிலும் ஆராய்ச்சி செய்வோருக்கு வசதியாக அலமாரிகள் பதித்துத் தேவையான நூல்களேத் தனியே வைத்துள்ளனர். நடக்கும் பொழுது ஒலி ஏற்படா மலிருப்பதற்காகத் தரையில் கம்பளம் விரித்துள்ளனர். மேசை மேல் பரவினுற்போல் மின் விளக்குகள் அமைத் துள்ளனர். நடன மன்றத்துக்குக் கீழே உள்ள அறையில். புத்தகங்கள், உருளும் அடுக்குப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அடுக்குப் பெட்டிகள் தண்டவாளத் தின் மீதோ அல்லது இவைகளுக்கென்று அமைத்த, பள்ளங்களிலோ உருளைகள் பதிய ஒடுகின்றன. 50 x 40' அளவுள்ள ஒவ்வொரு அறையிலும் உலோகத்தாலான 22 வரிசை தட்டுகளிருக்கும். ஒவ்வொரு தட்டிலும் 5000 க்கு மேற்பட்ட நூல்களிருக்கும்.

இந்தியா குடியரசான பின் கி. பி. 1948 முதல் இம்பீரி யல் நூலகம், நம் காட்டின் தேசிய நூலகமாய் விளங்கு கின்றது. இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பெல்வெடீர் கட்டிடமானது, சிறந்ததொரு நூலகக் கட்டிடமாய் மாற்றி அமைக்கப்பட்டது. 1945-46 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்நூலகச் செலவிற்கு ரூ 1,88,000 ஒதுக்கி யிருந்தது. 1951-52 ல் ரூ 3,78,110 இந்நூலகச் செலவிற்கு அரசின ரால் தரப்பட்டது. இந்திய மாகாணங்கள். அனைத்திலும் வெளியாகும் நூல்களனைத்தையும் வாங்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை செலவிடப்

பட்டது.

  • இந்நூலகத்திற்கு நன்கொடையாகப் பொருளும் நூல் களும் வழங்கியவர்கள் பலராவர். புகார் (Buhar) சமீன் தார் தன்னிடமிருந்த உருது - பார்சி மொழிகளில் எழுதப் பட்ட நூல்கள் பலவற்றையும், ஏட்டுச் சுவடிகள் எண். ணிறந்தனவையும், இந்நூலகத்திற்கு நன்கொடையாகக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/95&oldid=589875" இலிருந்து மீள்விக்கப்பட்டது