பக்கம்:நூல் நிலையம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 37

கொடுத்துதவியது குறிப்பிடத்தக்கதாகும். சர் ஆசுடோசு முக்கர்சியினது குடும்பத்தினர் தங்களிடமிருந்த 80,000 நாற்களேயும் இலவசமாகக் கொடுத்துதவினர். பெர்காம் பூர் டாக்டர் ராம்தாசு சென் என்பவர் சேகரித்து வைத் திருந்த 3500, வங்காள வடமொழி நூல்கள் இதுபோன்று இக்காலகத்திற்கு அளிக்கப்பட்டன. ஹைதராபாத்திலி குந்து பிரிட்டிசு பிரதிநிதியின் அலுவலகத்திலிருந்த 4000 நால்கள் இந்நூலகத்திற்குத் தரப்பட்டுள்ளன. மேலும் விலைக்கு வாங்கப்பட்ட கையெழுத்துச் சுவடிகளும், சின வெளியீடுகளும், இந்நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

இன்று இந்நூலகத்தில் 1,50,000 நூல்களும் 2000 கையெழுத்துச் சுவடிகளும் உள்ளன. 500 க்கு மேற் பட்ட, வார-மாத-நாளிதழ்கள் வரவழைக்கப்படுகின்றன. மத்திய மாகாண அரசாங்க வெளியீடுகள் யாவும் இக் ஆாலகத்தில் இடம் பெறுகின்றன. இந்நூலகம் காலை 7 மணியிலிருந்து இரவு பத்துமணி வரை மக்களுக்காகத் திறந்திருக்கும். ஆண்டு தோறும், 75,000 க்கு மேற்பட்ட மக்கள். இந்நூலகத்திற்கு வந்து செல்கின்றனர் என்று இங் நூலக அறிக்கை ஒன்று கூறுகின்றது.

நூலகத்தார்க்கு

(குறிப்பு: இன்று கந்தமிழ் நாட்டில் இல்லங்கள் தோறும், சிற்றுார் கள் தோறும், பள்ளிகள் தோறும் நூலகங்கள் விளங்கு கின்றன. இத்தகைய நூலகங்களை உருவாக்குகின்ற வர்க்கு உதவியாக இருத்தற்பொருட்டு இப்பகுதியில் சில குறிப்புக்களைத் தருகின்றேன். இக் குறிப்புக்கள், சிறு நூலகங்களை நடத்துவோர்க்குப் பெரிதும் பயன்படுமென எண்ணுகின்றேன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/96&oldid=589876" இலிருந்து மீள்விக்கப்பட்டது