பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
111
 

லையே?இவர்களுக்கு நம் மேல் இவ்வளவு பிரியமா?’ என்று கமலக்கண்ணனுக்கே வியப்பாகிவிட்டது சில குடிசைகளில் பெண்களே ஆரத்தி எடுத்ததுடன் அவருக்கு மட்டரகக் குங்குமத்தில் திலகமும் வைத்தார்கள். கமலக்கண்ணனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அப்போதே தேர்தலில் வென்று விட்டது போன்றபெருமிதம் வந்துவிட்டது இத்தனை பயபக்தியுள்ள சேரி மக்களின் ஒட்டு நிச்சயம் தனக்கே கிடைக் கும் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொரு அபேட்சகரையும் இப்படியே வரவேற்றிருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டார். நவீன காலப் பொதுவாழ்விலே மிகவும் சிரம சாத்தியமான காரியம் அசல் புகழ் எது? அசல் பிரியம் எது? என்று கண்டு பிடிப்பதுதான். கமலக்கண்ணனோ அப்படி எல்லாம் கண்டு பிடிக்க முடியாமல் ஆரத்தியையும் மாலையையும், திலகத்தையும் அசல் பிரியமாகவே எடுத்துக்கொண்டு விட்டார். ஆனால் அன்று மாலையிலே ஆரத்தி, மாலை, திலகம் ஆகியவற்றைப்பற்றிய சாதாரண உண்மைகளை அவர் புரிந்து கொள்ளும்படியான சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை அவரைத் தேடிச் சேரியிலிருந்து ஆட்கள் வந்தார்கள், வந்த ஒவ்வோர் ஆளும் பேரம்பேசினான். பேரம் ஒத்து வராமற் போகவே ஓர் ஆள் கோபமாகச் சொல்லியே விட்டான்:

“இன்னா சார்! நீ ஏதோ பெரிசாக் குடுக்கப் போறேன்னு நான் தெண்டத்துக்கு மாலை, ஆரத்தின்னு, எங்க பேட்டையிலே கைக் காசைச் செலவழித்துத் தட புடல் பண்ணினேனே?”

கமலக்கண்ணனுக்கு இந்த வார்த்தைகள் கரீறென்று உறைத்தன. பணத்தைக் கொண்டு வந்து அந்த ஆளுக்கு முன்னால் எறிந்தார்.

“நீயே வச்சுக்க சார்! நம்பளுக்கு வாணாம் இந்தப் பிச்சைக் காசு. ஏதோ நாய்க்கு வீசிக் கடாசற. மாதிரி எறி பிறியே. நீ ஒட் வேனும்னே நான் ஏற்பாடு பண்றேன்னேன். ஏதோ தருமம் பண்ற மாதிரி வீசி எறிஞ்சாவாணாம் சார்...”