பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

123


எம். எல். ஏக்களோட குட்புக்ஸ்ல இருக்கணும். அதை நான் பார்த்து முடிச்சுத்தரேன். கொஞ்சம் செலவழியும், தயங்காமே செலவழிக்கணும்...”

“ஏற்கெனவே வேறே நிறையச் செல்வாகியிருக்கு. நீங்க வேறே காரைப்பத்திச் சொல்றீங்க...”

“இதுக்கெல்லாம் தயங்கினிங்கன்னா ஒண்னுமே ஆகாதுங்க... அஞ்சு வருஷம் மந்திரியா இருக்கிறதுன்னா சும்மாவா...?”

“அதுக்குச் சொல்ல வரலே. பார்ட்டிக்கே நான் நிறையச்செஞ்சிருக்கேன். நான் ஒரு ‘டெய்லி’ நடத்தறனே, அதுலே எவ்வளவோ கையைப் பிடிக்குது...இருந்தும் பார்ட்டிக்காக அதைவிடாப்பிடியா நடத்திட்டுவரேன்...”

“அதெல்லாம் வேறே..அதைக்கொண்டாந்து இதிலே சம்பந்தப்படுத்தாதீங்க...இது எப்படின்னா...சாதாரணமாகவே கொஞ்சம் வசதியுள்ளவங்கதான் மந்திரியா வர முடியும். நீங்களோ சுபாவமாகவே வசதியுள்ளவரு. மந்திரியா வரணுங்கற ஆசையுள்ள பத்து எம்.எல்.ஏக்கள் உங்களுக்காக அதை விட்டுக்குடுக்கணும்னா பதிலுக்கு. அவங்களுக்காக நீங்க ஏதாவது செஞ்சுத்தானே ஆகணும்?”

“என்னமோ...ரொம்பப் பெரிசா பயமுறுத்தீங்க... பார்க்கலாம்...” கமலக்கண்ணனுக்குத் தான் ஒரு மந்திரியாக வரமுடியும் என்ற நிலைமைகள் தெளிவாகி விட்டன. அதற்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக இறங்கினார். கட்சி ஊழியர்கள் பாராட்டுக்கூட்டத்தன்று அவர் மிக மிக உற்சாகமாக இருந்தார். எல்லாரும் அவரையும் அவருடைய வெற்றியையும் வானளாவப் புகழ்ந்து பேசினார்கள். தேர்தலுக்கு முன்பு நடந்த ஊழியர் கூட்டத்தில் கமலக்கண்ணன் அசல் தேசியவாதி அல்ல என்றும் அவரைப் போன்றவர்கள் கட்சியில் தீவிர உறுப்பினராகக்கூடாதென்றும்’– தாக்கிப் பேசிய அதே காந்திராமன் இன்று தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் பேசுவதாகவும் மாலையணிவிப்பு தாகவும் நிகழ்ச்சி நிரலில் கண்டிருந்தது. கமலக்கண்ணன் முற்றிலும் எதிர்பாராத மாறுதல் இது. அதனால் எல்லா-