பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
144
நெஞ்சக்கனல்
 


பிக்ஸ்ட்...”என்று முடித்தார் உள்ளூர் மந்திரி கமலக்கண்ணன். எதிர்ப்புறம் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி ஆயிரம் நன்றிகளை அவசர அவசரமாகத் தெரிவித்து விட்டு ஃபோனை வைத்தார்.

டெல்லி மந்திரி ராஜ்பவனிலிருந்து கெஸ்ட் ஹவுஸுக் குக் காரில் வரும்போது உடன் வந்த கமலக்கண்ணன் ‘நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்தாயிற்று’ என்பதை அவரிடம் தெரிவித்தார். அவரும் அதற்காக மகிழ்ந்து உடனே கமலக்கண்ணனுக்கு நன்றி தெரிவித்தார்.

–இரவு டின்னருக்கும் புகழ்பெற்ற தென்னிந்திய இட்லி சாம்பார் இரண்டும் சூடாக இருந்தால் நல்லது என்று ரமேஷ்சிங் அபிப்பிராயப்படவே. நகரத்திலேயே இட்லி தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹோட்டல் ஒன்றிற்குத் தகவல் சொல்லி ஜீப்பில் ஆளனுப்பினார் கமலக்கண்ணன், இட்லி சாம்பார் வந்தது. டெல்லி மந்திரி முன்றே மூன்று இட்லிகளை ஆறு பிளேட் சாம்பாரில் கரைத்துக் குடித்தார். சாம்பாரை மட்டுமே அவர் அதிகம் சுவைப்பதாகத் தெரிந்தது. சாம்பாருக்குத் தொட்டுக்கொள்ளவே இட்லியை அவர் பயன்படுத்தினார். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த டில்லி மந்திரியை ஒருநாள் பகல் தன் வீட்டில் லஞ்சிற்கு அழைத்து ...உள்ளுர் இண்டஸ்டிரியலிஸ்ட்டுகளையும், பாங்கர்களையும், மந்திரிகளையும் கூப்பிட்டு ஒரு தடபுடல் செய்தால் என்ன?...’ என்று எண்ணினார். உடனே ரமேஷ்சிங்கிடம் தன் ஆசையை மெல்ல வெளியிட்டார் கமலக்கண்ணன்.

“ஒ எஸ் வித் பிளஷர்”–என்று புன்னகையோடு இணங்கினார் டெல்லி மந்திரி. உடனே மனைவிக்கு ஃபோன் செய்து சமையல் ஏற்பாடுகள்–மெனு பற்றி விவரித்தார் காரியதரிசிக்கு...அழைப்பு அனுப்பவேண்டிய ஆட்கள் பற்றி உத்தரவுகள் பிறப்பித்தார் நண்பர்களுக்கும் அட்டகாசமாக ஃபோன் செய்தார்.

“யாரு–குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் நாயுடுகாருவா? நீங்க இல்லாம நம்ம வீட்டிலே எந்த விருந்தும் நடக்காது. நடக்-