பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நெஞ்சக்கனல்

தது அவருக்கு. அந்தப் புகழின் உலகில் இதுவரை அவர் இருந்த இடம் அதலபாதாளம்தான். பணம் இருக்கலாம், ஆனால் அதை வைத்துக்கொண்டு இந்தப் புதிய வெது வெதுப்பான சுகத்தை அடைந்து பார்த்துவிட வேண்டு மென்ற தவிப்பு தவிர்க்க முடியாமலே அவருள் வளர்ந்து பெருகிவிட்டது. பணத்தினால் அடைய முடியாதது இல்லை. ஆனால் இந்த விதமான அசல் புகழினைப் பணத்தினால் மட்டுமே அடைய முடிவதில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அதனை அடைகிற மார்க்கங்களில் எதிலும் நடக்கத் தயங்கலாகாது என்ற முடிவிற்கு அந்தரங்கமாக வந்திருந்தார் அவர். அதன் முதல் விளைவே, அந்தக் குக்கிராமத்துக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேச விரும்பிய விருப்பம். பணத்தைச் செலவழித்து அடைகிற புகழைவிடத் திறமையையும், சாதுரியத்தையும் செலவழித்து அடைகிற புகழ்தான் சிறந்தது, விலைக்குப் பெறாமல், பரிசாக அல்லது கொடையாகப் பெறுகிற ஒரு பொருளின் சுகம் தானாக வருகிற–தகுதிக்காக வருகிற புகழில் இருக்கிறது. அந்தச் சொகுசு நிறைந்த சுகத்தின்மேல் அவருக்கு ஒரு காதலே உண்டாகி விட்டது. காதல் என்பதைவிடச் சக்தி வாய்ந்த மையல் என்ற வார்த்தையைப் போட்டுச்சொன்னாலும் அவருக்கு உண்டான புகழ் வேட்கைக்குப் பொருத்தமானதாகவே இருக்கும். தந்தக்கோபுரத்திலிருந்து உலகைப் பார்த்து வந்த அவரைப் போன்றவர்களுக்கு இந்தக் குடியரசு நூற்றாண்டின் சுகமான அநுபவம் இப்படிப்பட்ட மேடைப் புகழ்தானே என்று ஒரு மயக்கம்கூட ஏற்பட்டுவிட்டது. பொது வாழ்வில் ஈடுபட்டுப்புகழடைய முதற்படி மேடைதான்'என்று நேற்றைய நிகழ்ச்சிக்குப்பின் அவர் புத்தகக்கடைக்குப் போய் வாங்கிவந்தமேடைக்கலை என்றபொருளுள்ள தலைப்போடு கூடிய ஆங்கிலப்புத்தகம் தன் முதல் வாக்கியத்தைத் தொடங்கியது.

“தமிழ்ப் புலவருக்கு ஆளனுப்பி விட்டேன்! இன்னும்