பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19

அரைமணியில் வந்துவிடுவார்” என்று ரோஸி திரும்பிவந்து கூறினாள். சிந்தனையிலாழ்ந்து போயிருந்த அவர் தலை நிமிர்ந்தார். பதில் எழுத எடுத்துவைத்திருந்த வேறு கடிதங்களுக்குப் பதிலை ‘டிக்டேட்’ செய்யத் தொடங்கினார்.

ஒரு ஸ்டெனோவுக்கு வேகமாக ஆங்கிலத்தில் டிக்டேட் செய்கிற அளவுக்கு வியாபாரக் கடிதங்களும், அவற்றை எழுதும் முறைகளும் அவருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. எப்படித் தொடங்கவேண்டும், எதைச் சொல்லவேண்டும், எவ்வள்வு சொல்லவேண்டும், எங்கே சொல்லவேண்டும் என்றெல்லாம் அவர் நன்றாக அறிவார். பிரசங்கத்தைத் தயாரிப்பதற்குத்தான் அவருக்குத் தமிழ்ப்புலவரின் அல்லது ஆங்கிலப் பேராசிரியரின் துணைவேண்டுமே ஒழிய–வியாபாரத்தை நடத்துவதற்கு யாருடைய உபாயமும் யோசனைகளும் அவருக்குத் தேவையில்லை. போதுமான உபாயங்களும் யோசனைகளும், அவரிடமே நிறைய இருந்தன.

2

புகழாசை என்பது சூதாடுவதைப் போன்றது, தோற்றால் மறுபடி வெல்கிற வரை ஆசை தணியாது. வென்றுவிட்டாலோ மேலும் மேலும் வெற்றியின் கடைசி உச்சிவரை ஏறிப் பார்க்க வேண்டுமென்று வெறி உண்டாகும். தெரிந்தோ, தெரியாமலோ சாதக பாதகங் களை அறிந்தோ அறியாமலோ கமலக்கண்ணனும் இந்தச் சூதாட்டத்தில் மையல் கொண்டுவிட்டார். பணமில்லாமையினால் மட்டுமே மனிதர்கள் தங்களை, ஏழைகளாக நினைத்துக்கொள்வதில்லை. விதம் விதமான ஏழைகள், விதம் விதமான பிரிவுகளில் இவ்வுலகில் இருக்கிறார்கள். பணத்தினால் ஏழைகள், புகழினால் ஏழைகள், அறிவினால் ஏழைகள், அந்தஸ்தினால் ஏழைகள் என்று எத்தனையோ வகைகள் இருக்கின்றன. மனிதனுடைய சுயமான இதயம் இருக்கிறதே; அதைச் சொர்க்கம் என்று புகழப்படுகிற இடத்திற்கு அனுப்பிவைத்தால்கூட அங்கும்