பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
21
 

தான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பண்டிதர். ‘என்ன இருந்தாலும் வடமொழி வடமொழி தானே?’ என்று அவருடைய தனித்தமிழ் நண்பர்கள் இடித்துரைக்கப் புகுந்தபின் ‘நவநீத கிருட்டினன்’ வெண்ணெய்க் கண்ணன் ஆகி ஒர் ஆரும் கடைசியில் ஒட்டிக் கொண்டுவிட்டது. தமிழ்ப் பண்டிதர்களுக்கு எப்போதுமே பெயருக்குப் பின்னால் ‘ஆர்’ போட்டுக் கொள்வதில் தனி விருப்பம் உண்டு.

இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது இவருடைய விநோதமான பெயரை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக்கொண்டார் கமலக்கண்ணன். டெலிபோன் மணி அடித்தது. “தமிழ்ப் பண்டிதர் வந்திருக்கிறார். உள்ளே அனுப்பட்டுமா?” என்று டெலிபோன் ஆப்ரேடரின் குரல் ஒலித்தது.

“உடனே அனுப்பிவை...” என்றார் கமலக்கண்ணன். சொல்லிவிட்டு” டெலிபோனை வைத்த சூட்டோடு பிரசங்கத்தை எழுதிக் கொள்வதற்கான தாள்களையும் பேனாவையும் மேஜைமேல் தயாராக எடுத்து வைத்து ஆயத்தம் செய்து கொண்டார்.

தமிழ்ப் பண்டிதர் வெண்ணெய்க் கண்ணனார் எனப்படும் நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு அந்தக் கட்டிடம் ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பலமுன்றநிதிவசூல்களுக்காகவும், நன்கொடை திரட்டுவதற்காகவும் வந்திருந்தும், காத்திருந்தும் பழக்கமான இடம்தான். ஆனால் இப்போது மட்டும் ஒரு வித்தியாசம். நன்கொடைக்காகவும், நிதிக்காகவும் அவராகத் தேடி வரும்போது கமலக்கண்ணனை வந்த உடனே பார்த்துவிடமுடியாது. காத்திருந்து ஆட்களிடம் பலமுறை சொல்லி அனுப்பிய பின்புதான் அவரைப் பார்க்க முடியும்.

இன்றோ கமலக்கண்ணனே வரச்சொல்லிக் கூப்பிட்டனுப்பியிருந்ததனால் நேரே உள்ளே போக முடிந்தது. கமலக்கண்ணனின் ஏர்க்கண்டிஷன் அறைக்குள், நுழைந்தவுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு எதிரே அவர்

நெ.—2