42
நெஞ்சக்கனல்
“ ‘புது பிளாக்’ கட்டுவதற்கு நீங்களெல்லாம் நிறைய உதவி செய்ய வேண்டும்... உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கும் எடுத்துச் சொல்லணும்...”
“பார்க்கலாம்! நல்ல காரியங்கள் தெய்வசித்தத்திலே தான் நடக்கணும்” என்று பட்டுக்கொள்ளாமல், ‘நான் கமிட்டலாக’ பதில் கூறினார் கமலக்கண்ணன்.
“உங்களைப் போன்றவர்கள்தான் இன்னிக்கு தெய்வங்களுக்குச் சமானம்” என்று விடாமல் மேலும் தொற்றிக்கொண்டே பேசினாள் அவள் . கமலக்கண்ணன் காரை நோக்கி மெதுவாக நகர்ந்தார். கலைச்செழியன் ஏற்கெனவே தயாராக முன் வீட்டில் உட்கார்ந்திருந்தபடியால் பின் தொடர்ந்து வந்திருந்த எல்லாரையும் நோக்கிக் கைகூப்பி விட்டுக் காரில் ஏறினார் கமலக்கண்ணன்.
“சீக்கிரமாப் போயிட்டா நியூஸை ஸிடி எடிஷன்லியே சேர்த்துப்பிடலாம்” என்று கலைச்செழியன் மீண்டும் கமலக்கண்ணனை நோக்கி வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே கூறினான்.
கமலக்கண்ணன் டிரைவரிடம், “முடிஞ்ச வரைக்கும் வேகமாகத்தான் போயேன்” என்று அவசரப்படுத்தினார்.
கார் விரைந்தது.
அவ்வளவு நேரம் ‘சிகரெட்’ பிடிக்காமலிருந்துவிட்ட தியாகத்தை அப்போதுதான் நினைவு கூர்ந்தவர்போல் முன் ஸீட்டில் அமர்ந்திருந்த நிருபர் கலைச்செழியனிடம் ஒரு மரியாதைக்காக சிகரெட் பாக்கெட்டை எடுத்து. நீட்டினார் கமலக்கண்ணன். நிருபர் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டபின்---கமலக்கண்ணன் புகைபிடிக்கத் தொடங்கினார். கார் விரைந்தது.
இருவருமே ஒருவருக்கொருவர் பேசாமல் பிரயாணத்தைத் தொடர்வது சூழ்நிலையைக் கடுமையாக்கவே – ஏதாவது ஒரு கல்லிடமாவது இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் போன்ற அந்தத் தவிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காகக் கமலக்கண்ணன் பேச்சுக் கொடுத்தார்.