பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்டுமுன் அன்பினை நாடி வளைந்தேன் மேவிய நல்லறம் பாடியணைந்தாய்! - பள்ளிக்கு கூடலில் மூப்பினைப் போக்கிவிட்டாய் - இளங் குமரனென் றென்னையே ஆக்கிவிட்டாய் ஊடலும் ஏனினி தேன்மொழியே - சொலும் உன்மொழி யாவையும் தீஞ்சுளையே! - பள்ளிக்கு - (24–2–1987) (இருபொருள் அமைந்த பாடலிது) தமிழ்:- பள்ளிக்கு-பள்ளிக்கூடத்திற்கு; முப்பால் அமுது - திருக்குறள்: கள்ளைத்தான் - கள்போல் இன்ப வெறியூட்டும் குறளைத்தான்; காதலில்மொழிப்பற்றில்; காலடி-காற்பங்கான பாடல் வரி: எழுகாலடிப்பாவை- 7><: ஒன்றே முக்கால் அடியுடைய குறட்பாவை: நாலடிப்பாதைநாலடியாரில்: காமமே-காமச்சுவை மட்டுமே (காமத்துப் பால்) மெய்ப்பொருள்-செம்பொருள் (பொருட் பால்) நல்லறம்-நன்னெறி (அறத்துப் பால்) கூடலில்-நான்மாடக் கூடலில். காதலி:- பள்ளிக்கு - பள்ளிகொள்வதற்கு: பாலமுது - பாலுணவு: காலடிப் பேரெழில் - காலழகு; எழுகாலடிப்பாவை-நடைபயில எழும் கால்களையுடைய பெண் நாலடிப்பாதையில்(ஊடலால்) நான்கு அடித் தொலைவில்: காமம்இன்பம்: ஒம்புக மெய்ப்பொருள்-உடலோம்புக; நல்லறம் - நல்லறமாகிய இல்லறம்: கூடலில் -உன்னைக் கூடுகையால். கவியரசர் முடியரசன் ( 83