பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணியெனைப் பற்ற நெஞ்சம் பேதலித் துழலுங் காலை தணியவே வந்து தாய்போல் தண்ணருள் சுரந்து காக்கும் *அண்ணலார் உதவ மெய்யில்! ஆருயிர் தங்கு மேனும் எண்ணவுஞ் செய்யா துள்ளம் ஏழையாம் இழிந்த சொல்லை மக்களின் கல்விக் காக மனம்மிக மாழ்கும் போது தக்கவர் அன்போ டந்த மயக்கினைத் தவிர்ப்ப துண்டு; சிக்கனம் அறியா என்றன் சிந்தனை கலங்கு மேனும் பொக்கையாய் ஏழை யென்று புகலுதல் அறவே செய்யேன்! வாழ்வினில் துயர வெள்ளம் அலைத்திட வந்து பன்னாள் சூழ்வதும் உண்டு; பண்பர் து.ாயநர் றொண்டர் அன்பர்

  • அண்ணலார் -புதுக்கோட்டை திருக்குறள்

கழகத் தலைவர் பு. அ. சுப்பிரமணியனார் கவியரசர் முடியரசன் E (3) (4) 1 :