பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்றவர் போலே எண்ணிக் குனிந்திட லின்றிச் சென்றால் உற்றவர் அறியும் வண்ணம் ஒருசிறி திடறி வைப்பேன்! படியெனக் கிடந்தால் கால்கள் பதியஎன் தலைமேல் வைப்பார்: வடிசிலை யானால் தாளில் வருபவர் தலையை வைப்பார்; படிகிற நிலையைக் காணில் பண்பிலார் மிதிப்பர்; ஆனால் முடியினை நிமிர்த்து நின்றால் முடங்குவர் என்னே மாந்தர்! கருவழி கடப்பார் நெஞ்சில் கடவுளென் றென்னை வைப்பார், அருவழி கடப்பார் சாலை அருகினில் நிறுத்தி வைப்பார்: இருவரும் எனையே எண்ணி ஏகுவர் மேலும் மேலும்; பெருமைகள் அனைத்தும் நானே பேசுதல் முறைமை யாமோ? கவியரசர் முடியரசன் E 43