பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைப் போராட்டம் - (கலிவெண்பா)


_ - -- ai = i ==

ஆழம் மிகவுடைய ஆறென்று வாழ்க்கைதனைச் சூழும் அறிவதனால் சொன்னால் மிகப்பொருந்தும்: வேகப் புனல்தள்ளி வெள்ளத் தெதிர்நீந்திப் போகப் பயின்றவரே போற்றுங் கரைகாண்பர்; வட்டப் பெருஞ்சுழிகள் வாய் திறந்து நிற்பதுண்டுஎட்டிப் பிடித்திழுத்தே ஏப்ப மிடமுயலும்: மூழ்கிச் சிலகாலை மூச்சடக்கிச் செல்கின்ற சூழ்நிலையும் நேர்வதுண்டு சோர்ந்துவிடக் கூடாது; துன்பம் ஒருகரையாய் இன்பம் மறுகரையாய், முன்பே அமைந்த முறைமை யுடையதுதான்; அந்தக் கரையிலையேல் அவ்வாற்றின் - - போக்கதனால் எந்தத் துயர்விளையும் என்றுரைக்க ஏலாது: கூட்டாய் முகில்பொழியக் கூடிப் புனல்பெருகும் காட்டாறாய் ஒவ்வொருகால் காண்பதுண் டவ்வாழ்க்கை; சேறாய்க் கலங்கிச் சிதறிக் கழிநீராய், ஊராமல் ஊர்ந்துவரும், ஒடிக் குழிவீழும், நாற்றம் மிகுந்திருக்கும் நாட்டில் சிலர்வாழ்க்கை, மாற்றி யமைக்க வழியறியா தேங்குகிறார்: 58 ) கெஞ்சிற் பூத்தவை