பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நெஞ்சத் துடிப்பு O | விழிசுமந்த அருளாலே வருவோர்க்கெல்லாம் விருந்தளித்தோம் வரவேற்றோம் நட்புங் கொண்டோம்; வழிசுமந்த பண்பாடு தமிழர்க் கென்றே வாய்நிறையப் புகழ்ந்துரைத்தார் மகிழ்ந்தோம்; ஆனால் எழில்சுமந்த என்நாட்டார் வந்தோர்க் கெல்லாம் ஏமாந்து குனிகின்ற பித்த ராகிப் பழிசுமந்து போனாரே என்ற போது பதைபதைக்கும் துடிதுடிக்கும் எனது நெஞ்சம். நல்லவர்யார் கெட்டவர்யார் என்ப தோரார்; நலிவகற்றி நலந்தந்து நாட்டை யாள வல்லவர் யார் அல்லவர்யார் அதுவும் தேரார்; வாயினிக்கப் பேசுவதை நம்பு கின்றார்; மெல்லியஓர் மின்மினியை ஒளிவி ளக்கா மேடை தனில் வைத்துவிட்டார்; இதனைச் செய்தார் மெல்லியலார் என்றுர்ைப்பர்; ஆண்க ளென்ன விதிவிலக்கா? இதையெண்ணித் துடிது டித்தேன் - 21