பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுபொறுக்கவில்லையே ஈரோட்டுப் பெரியார் தாம் என்ன கற்றார்? ஈடில்லாக் கலைஞரவர் என்ன கற்றார்? பாராட்டுப் பெற்றிலரோ? என்று கேட்பர்; பயனில்லாக் கேள்வியிது; கல்லூ ரிக்குள் பேரேட்டில் இவர்பெயர்கள் இல்லை; ஆனால் பிழையின்றி இவர்கற்ற நூல்கள் எல்லாம் ஒரேட்டில் அடங்காவே! அதனா லன்றோ உலகவர லாற்றேட்டில் இடமும் பெற்றார். பருவங்கள் பலவுண்டு மாந்த னுக்கு; பருவநிலைக் கேற்றவணம் செயல்கள் வேண்டும்; திருமணமும் மாந்தனுக்குத் தேவை; ஆனால் சிறுபிள்ளைப் பருவத்திற் செய்தல் நன்றோ? அறிவுவளர் கலைபலவும் பயிலும் பிள்ளை அரசியலிற் புகநினைதல் முறைமை யன்று; உறைதயிரில் வெண்ணெய்தனை எடுக்கு முன்னே உருகியநெய் வேண்டுமெனிற் காண்ப துண்டோ? அரசியலில் நூலறிவைக் கற்றுக் கொள்க அதனாலே வரும்பயனைப் பெற்றுக் கொள்க அரசியலில் போர்துழைவை விட்டுச் செல்க ஆன்றோரின் அறிவுரையைப் பற்றிச் செல்க அரசியலைப் படிப்பதுதான் இந்த வேளை அத்துறையைப் பிடிப்பதுவா உங்கள் வேலை? அரசியலை உரமாக்கி வளர்தல் வேண்டும் அரசியலார்க் குரமாகி அழிதல் வேண்டா. 36