பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே இதழ்களும் மாணவரும் O நூலகத்துப் புகுந்துவரக் கூசு கின்றீர் நோய்நுண்மம் போற்பரவும் இதழ்கள் தம்மைப் பாலமுதம் எனவெடுத்துப் பருகு கின்றீர் பகுத்தறிவைப் பாழாக்க முனைந்து விட்டீர் காலையெனும் ஒருபொழுது விடியு முன்னே கயமைமிகும் இதழ்களையே வாங்கு கின்றீர் பாலுணர்வுக் கோப்பைக்குள் வீழ்ந்து வீழ்ந்து படிக்கின்ற வண்டானிர் இளைஞர் இங்கே. திரை போட்டு நிகழ்த்துகிற செயலை எல்லாம் திரை நீக்கி காட்டுகிறார் இதழ்கள் என்றே; திரை நீட்டிச் சங்கத்து நூல்க ளெல்லாம் தின்றாயே கொடுங்கடலே இவற்றை மட்டும் இரை யாக்கிக் கொள்ளாமல் இருக் கின்றாயே எத்துணையோ பாடல்களைச் சுவைத்த தீயே குறைகாட்டிப் பொருளிட்டும் இதழை மட்டும் கொழுநாவால் தீண்டாமல் ஏன் வி டுத்தாய்? 37


... . . .”

  • *1 = - ? *ラ々e 多"め ee ニぐ字?ィ、あみ @ c*