பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அறிவியலை இந்நாட்டில் வளர்க்க எண்னு ம் ஆர்வத்தால் பொருள் கொட்டி இதழ்ந டாத்த அறிஞர் சிலர் முன்வந்தார்; ஆனால் இங்கே அவர்கண்ட பலனென்ன? இந்த மண்ணில் அறிவியலே வளராது; களைக ளாக அறியாமை மண்டுமெனக் கண்டு கொண்டார்; 'நெறிவிலகி வந்துவிட்டோம்; கற்பா றைக்குள் நெற்பயிரா விளையும்?’ என ஒதுங்கி விட்டார் சிந்தனைக்கு வளர்ச்சிதரும் இதழ்கள், நல்ல சீர்திருத்தக் கொள்கைதரும் இதழ்கள், ஆயும் புந்திக்கு விருந்தளிக்கும் இதழ்கள், போற்றும் பொதுமைக்கு வழிவகுக்கும் இதழ்கள் விற்க முந்திக்கொண் டிங்கெழுந்து காலைப் போதில் முனைப்போடு கடைவிரித்தார்; மனலை எனும் அந்திக்குள் திறந்தகடை மூடி விட்டார் அவைகொள் வா ரில்லாத கார ணத்தால் நல்லறிவைப் பதப்படுத்தும் பருவத் துள்ள நம்மிளை ஞர் இவற்றையெலாம் புறக்க ரிைத்துப் புல்லுனர்வைக் கிளறிவிடும் இதழ்கள் வாங்கிப் போற்றுவிரேல் அறிவுநூனி மழுங்கிப் போகும்; அல்வழியில் மனஞ்செல்லும்; பண்பு தேயும்; அருமைமிகும் இளம்பருவம் கருகி வீழும்: கல்வியது சருகாகிக் காற்றிற் போகும்; காளையர்தம் பிஞ்சுள் ளம் வெம்பி வீழும். 38