பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே இனவுணர்வை ஊட்டுவதும் மொழியுணர்வை ஏற்றுவதும் யார்பொ றுப்பு? மனவுணர்வில் ஈருணர்வும் மதியுடையீர் நும்மிடமே வதிதல் காணேன்; சினவுணர்வு கொள்ளாதீர்; சிறந்தபணி நமதன்றோ? சிந்தித் தாய்க; எனவுமைநான் வேண்டுகின்றேன்; இனியேனும் பொறுப்புணர்க ஏற்றங் காண்க. நாளையுல காள்பவரை நமதுகையில் ஒப்படைத்தார் நாட்டு மக்கள்; காளைகளைச் சிறுவர்களைக் கண்மணிபோற் காப்பது நம் கடமை யாகும்; வேளையிது தவறிவிடின் விளை நிலத்திற் களைகளலால் வேறு தோன்றா பூளை யெனப் போகாதீர் புன் மைகளை நாடாதீள் புலவர் நீவிர். பொறுப்புணர மறுப்பீரேல் புலவரெனும் பட்டத்தைப் பூணல் நன்றோ? வெறுப்புடைய பேடிக்கு வீரனெனும் பேர்ெதற்கு? வேலெ தற்கு? விருப்புடைய புலவர் பெயர் வேண்டுமெனிற் பெயர்க்கிழுக்கு விளையா வண்ணம் கருத்துடன் நீர் காத்திடுக கடமைகளை ஆற்றிடுக காலம் வாழ்த்தும். _ பளை o ே ளைப்பூ. 47