பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கண்ணெதிரில் அளந்தபொருள், கடையிலவா நிறுத்தபொருள் கடுகி வந்து பின்னதனைப் பார்த்தாலோ பெற்றதெலாங் குறைந்திருக்கும்; பெருத்த மாயம் பண்ணிடுவர்; சுட்டெரிக்கும் பகற்பொழுதில் வரிசைதனிற் பிச்சை மாந்தர். நண்ணுதல்போல் மகளிரெலாம் நடுத்தெருவில் காத்திருப்பர் ; நடைதான் மிஞ்சும். விலையின்றி மனமிளகி ஈவதுபோல் வந்தவரை விரட்டு கின்றார்; தலையொன்று குறையாமல் தருவதற்குப் பொருள்மிகவே தந்தி ருந்தும் இலையென்று மொழிகின்றார் ஈவிரக்கம் இல்லாமல் ஏய்த்து நிற்பார்; கலையென்று கவருவதைக் கற்றவர்கள் களியாட்டம் ஆடு கின்றார். இந்தநிலை மாறாதா? இழிவுநிலை தீராதா? எளிமை யாக வந்தவர்கள் பொருள் வாங்கி வாழும் நிலை வாராதா? வாக்கு வாங்க வந்தவர்கள். துயர் நீங்க வழியொன்றுஞ் செய்யாரா? வாடும் மக்கள் நொந்தமனம் ஆறாதா? நூறாண்டு சென்றாலும் நோய்தீ ராதா? 56