பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே விடுதலையும் பெற்றுவிட்டோம் விழாக்களையும் நடத்திவிட்டோம் விண் கூ டத்தில் படுவிரைவில் ஏறிவிட்டோம் பலமுனையிற் சிறந்துவிட்டோம் பாழும் நாட்டிற் கெடுதலையே காணுகிறோம் கீழ்மைகளே பூணுகிறோம் கிடக்கும் மக்கள் படுதுயரந் தீரவில்லை பஞ்சங்கள் மாறவில்லை பயனே இல்லை. விடுதலையால் என்ன பயன்? வேளை தொறும் நுகர் பொருள்கள் விரைந்து வாங்கப் படுதுயரம் உறலாமோ? பகிர்ந்தளிக்குங் கடைகளிலும் பழிகள் செய்யும் கெடுதலைகள் வரலாமோ? கெடுநிலையில் மக்களினும் கிடக்க லாமோ? விடுதலையால் என்ன பயன்? வெற்றொலியால் என்ன பயன்? வினவு கின்றோம். விடைபகர வாயில்லை விடுதலையை நுகர்வோர்க்கு விழிகள் இல்லை இடையிலெவர் உரைத்தாலும் இருசெவியும் சரியில்லை என்னே விந்தை! குடைநிழலில் அமர்ந்திருப்போர் கூர் வெயிலின் வெம்மைதருங் கொடுமை காணார் படைநடுங்கும் பெரும்புர ட்சி பர விவரின் மக்கள் துயர் பறந்து போகும். 57