பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அலுவலைக் குறைத்துக் கொண்டான் ஆசையைப் பெருக்கிக் கொண் டான் பலபழி செய்தும் வாழ்வைப் பகட்டுதற் கெண்ணி விட்டான் நலவழி நடப்ப தற்கு நாட்டமே அவனுக் கில்லை சொலவொரு சொல்லு மில்லைத் துய்மையை மாய்த்தே விட்டான் தேவையைப் பெருக்கிக் கொண்டால் திசைகளும் மாறிப் போகும்; ஆவலை வளர விட்டால் அதற்கென எல்லை யில்லை; கோவழி எதுவோ அஃதே குடி வழி யாகுங் கண்டீர் ஆவது கருதும் மாந்தர்க் காட்சியிற் கவனம் வேண்டும். 60