பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கொள்கையின் மேன் மைக் காக மாறிடிற் குற்ற மில்லை கொள்ளையை மனத்திற் கொண்டு. கொம்புகள் தாவிச் சென்றால் "எள்ளலுக் குரிய ரானார் இழிகுணம் படைத்தா ரென்றே 1அள்ளலில் எறிவ தன்றி அவரையார் மதிப்பா ரிங்கே? கொள்ளைகள் கொலைகள் செய்வோன் பதுங்கிடும் கூடா ரம்போல் உள் ளதே சட்ட மன்றம்’ என்றதோர் உணர்வு தோன்றி உள்ளமே நொந்து போனார் ஊரவர்; அவர்தம் நெஞ்சில் வெள்ளமே திரண்டு வந்தால் வீணரின் நிலைஎன் னாகும்? வாக்குகள் அளித்தோம் சட்ட மன்றமர் வாய்ப்பைப் பெற்றோர் ஆக்குவர் நன் மை யென்றே ஆவலிற் காத்தி ருந்தோம்; தாக்குதல் நடத்து கின்றார்; தகா மொ ழி பேசு கின்றார் பூக்களில் தேனி யில்லை புழுக்களே நெளியக் கண்டோம் 62