பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் தொகுத்தளித்த வரிசையிலேயே, அவ் எட்டுத்தொகை நூல் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என, என் உள்ளம் விரும்பினாலும், சில பல தாரணங்களால், அவ்வரிசை வழிச் செல்ல இயலாமல் போய்விட்டது. அண்மை யில், அ வ் வ ரி ைச யு ள், நான்காவதாக நிற்பதும், 'ஒத்தபதிற்றுப்பத்து' என்ற பாராட்டினைப் பெற்றதுமாகிய பதிற்றுப்பத்தின் விளக்கத்தினை அளிக்க முன் வந்து, முதலும் ஈறும் இல்லாமல் போக, இடையில் எஞ்சி நின்ற எட்டுப் பத்துக்களில் முதல் ஐந்து பத்துக்களை, முறையே, "புண் உமிழ்குருதி', 'அடுநெய் ஆவுதி', 'கமழ்குரல் துழாய்', 'சுடர்வீ வேங்கை', 'வடு அடும் நுண்அயிர்' என்ற தலைப்புகளில் வெளியிட்டேன். எஞ்சிய பத்துக்களின் விளக்கங்கள் ஏட்டளவாய் உள்ளன, விரைவில் வெளிவரும்.

கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய 'தமிழ்ப்பொழில்’’ தென் இந்திய ைச வ சி த் தா ந் த நூற்பதிப்புக் கழக வெளியீடாகிய, "செந்தமிழ்ச் செல்வி’ ஆகிய திங்கள் வெளியீடுகளில் நான் எழுதி வந்த பதினேழு கட்டுரைகளை ஒரு நூலாகத் தொகுத்து, 1935இல் எழுதப்பட்ட முதல் கட்டுரைத் தலைப்பாகிய "காவிரி' என்ற பெயரில் ஒரு நூல் வெளியிட்டேன்.

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்ற பெருமைக் குரிய நூலை, வரலாற்றுக் கண்ணோடும், இலக்கியக் கண்ணோடும், பாட்டுடைத் தலைவர்களிள் பெருமை சிறுமை களின் கண்ணோடும் திறனாய்வு செய்தாரும், செய்வாரும் பலர். அத்தகைய திறனாய்வுகள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்க அவர்கள் எடுத்த முடிவுகளில் சில, இளங்கோ அடிகளின் படைப்போடு முரண்படுவதாகத் தெரிய வந்தமையால், அம் முரண்பாடுகளைத் தக்க காரணம் காட்டி விளக்கம் அளித்தேன். அவ்வாறு பதினோரு

VI.