பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள், ஆயிரம் ஆயிரம் பாக்களைப் பாடிச்சென்றார்கள். ஆனால், அவர்கள் பாடிச்சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறிவிட்டார்கள், விழிப்புணர்வு இருந்தவர்கள், அழிந்தனபோக, அழியாதிருந்த அப்பழம் பாக்களையெல்லாம் அரிதின்முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப்பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்றுகூடி இருந்தும், அப் பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம், அப்பாக்களின் அடிஅளவு ஆ கி ய வ ற் ைற அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான் எட்டுத்தொகை நூல்களில், இடம் பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம் காலமக்களும் உணர்ந்து மகிழவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட காரணத்தால், அவ்வரிசையுள் முதற்கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான் நற்றினையினை, 'நற்றிணை விருந்து' என்ற தலைப்பிலும், நல்ல குறுந்தொகை' எனச் சிறப்பிக்கப்பெற்றதான் குறுந்தொகை யினை, "குறுந்தொகைக் கோவை' என்ற தலைப்பிலும், ஆறாவதுஇடம் அளிக்கப்பற்றது ஆயினும், கற்றறிந்தார் போற்றும் கலி' என்ற சிறப்பினைப் பெற்றதான் கலித் தொகையினைப் பாலைச்செல்வி', 'குறிஞ்சிக்குமரி", :மருதநில மங்கை', 'முல்லைக்கொடி’, நெய்தற்கன்னி', என்ற ஐந்து தலைப்புகளிலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன். o - - -

v