பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்மக்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளை உண்டு, களிப்பு மிகுந்து, தம்மேல்விழும் சிறுசிறு மழைநீர்த் துளிகளைப் பொருட்படுத்தாமல், முன்னும் பின்னும் தொங்கவிட்ட, மேலாடை உடையாாய், பகல் கடந்துபோன அந்திப் போதிலும், தம் மனம்போன போக்கில் திரிதலைச் செய்ய,

வெள்ளிய சங்கு வளைகள் இறுக அணியப்பெற்ற முன் கையினையும், மூங்கில்போலும் ேதாளினை யும், மென்மைத் தன்மை வாய்ந்த சாயலினையும், முத்தை ஒத்த முறுவலிக்கும் பற்கனையும், அழகிய மகரக் குழையின் அழகிற்குப் பொருந்தின, மிகச்சிறந்த அழகினையும். அருள் உணர்வாம் குளிர்ச்சினையும் உடைய கண்களையும், மடப்பத்தையும் கொண்ட மகளிர், மலர்த்தட்டிலே இட்டுவைத்த, மலரும் பருவத்து பேரரும்பாகிய, மெல்லிய காம்பினையுடையவாகிய பிச்சியின் அழகிய இதழ்கள் மலரும் பருவம்பெற்று மலர்த்து மனம்விச, மலைப்பொழுது வந்துவிட்டது என அறிந்து, இரும்பால் செய்த விளக்கில், நெய்தோய்ந்த திரியைக் கொளுத்தி, நெல்லையும் ம ல ை யு ம் துரவி, இல்லுறை தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி, வளங்கொழிக்கும் வணிக வீதியெல்லாம், மாலைக்காலத்தை - விழாவாகக்

கொண்டாட

மனையில் வாழும் புறாவின், சிவந்த கால்களையுடைய சேவல், தான்் இன்பம் நுகருதற்குரிய பெடைகளோடு, ஊர் மன்றம் சென்று இ ை தேடி உண்ணாமல் இரவுபகல் தெரியாமல் மயங்கு கையினாலே, செயல் இழந்து, தாங்கும் பலகைகளில் தடுத்த கால்கள் ஆறும்படி மாறிமாறி இருக்கச், சிறிய குற்றேவல் செய்வார். சுருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நிறம் வாய்த்த தறுமணப் பொருள்களை அரைத்து அரைத்து நறுமணம் நாறும் அம்மியில், கஸ்தூரிமுதலிய

90