பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருள்களாய் ஆன சாந்து அரைக்க, வடநாட்ட்ார் கொண்டுவந்து கொடுத்த வெண்ணிறம் வாய்ந்த சந்தனக்கல்: தென் திசையிலிருந்து வந்த தான் சந்தனக் கட்டையோடு பயன்படாமல் கிடக்க, மகளிர், தம் கூந்தலில், மாலையிட்டு முடியாது. பலவாக பின்னி விடப்பட்ட அக் கூந்தலில் சில் மலரே இட்டு முடிப்பான் வேண்டி,குளிர்ந்த நறுமணம் வாய்ந்த சந்தனவிறகில் நெருப்பை உண்டாக்கி, கரிய வயிரம்வாய்ந்த அகிற் கட்டையோடு வெள்ளிய கண்ட சருக்கரையையும்

கூட்டிப் புகை எழுப்ப.

தொழில் வல்ல தட்டான், அழகு பெறப்பண்ணிய சிவந்த நிறத்தை உடைய ஆலவட்டம், அதாவது விசிறி, உறையிடப்பட்டு, வளைந்த முளைக் கோலில், சிலந்திப் பூச்சிகளின் வெள்ளிய நூல்களால் சூழப் பட்டதாய்த் தொங்க விடப்பட்டிருக்க, வானளாவ உயர்ந்த மேல் மாடத்தில், வேனிற் பரு வ த் தி ல் பள்ளி கொள்வார்க்குத் தென்றல் காற்றைத்தரும் , பலகணிகளில் நின்று உ ல வ து , இடைவெளி இடம் பெறாது இணைக்கப்பெற்ற பெருந்தும் வாயினைக் கொண்ட கதவுகள், தாழிடப்பட்டுக் கிடக்க கல் என்னும் ஒசையினை எழுப்பும் சிறுதுரல் விடாது துளவிக் கொண்டிருப்பதால், இளையரும், மு தி ய ரும் ஆகிய எல்லோரும், குறுகிய வாயினையுடைய குடத்தில் உள்ள நீரைக்குடியாமல், வாய் அகன்ற இத்தளத்தில் இட்டிருக்கும், சிவந்த நெருப்பு தரும் வெம்மையை விரும்பி ஏற்றுக்கொள்ள.

ஆடல் தொழிலை உடைய மகளிர், கொட்டும் பனிதரும் குளிரால், தன் நிலைகுலைந்துபோன இனிய இசையை இயல்பாக எழுப்பும் நரம்பைத், தாம்பாடும் வாய்ப்பாட்டினை, யாழும் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்குப்

91