பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருத்து வருகின்ற தம் முலையின் வெப்பத்தை தடவிக் கரிய தண்டினை உடைய சிறிய யாழைப், பண் நிற்க வேண்டிய முறையில் நிறுத்த, கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தா நிற்கக், கூதிர் பருவமாய் நிலைபெற்றது அக்காலம்.

நால்வேறு திசைகளிலும் விரிந்த கதிர்களைப் பரப்பிய, அகன்ற இடத்தை உடைய ஞாயிறு மண்டிலம், அணித்து அணித்தாக, இரண்டு இ ட ங் க ளி ல் நாட்டிய இரண்டு கோல்கள் இடத்தும், சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக் கொள்ளும் தன்மை தப்பாதபடி, மேற்றிசைக்கண் சேரற்கு எழுந்து, ஒரு பக்கத்தைச் சாரப் போகாத சித் திரைத் திங்களின் நடுவில்பற்றி நின்ற யாதொரு நாளில், பதினைந்தாம் நாழிகையில், சிற்பநூல் அறிந்த தச்சர், நூலைக்கூரிதாக நேரேபிடித்துத், திசைகளைக் குறித்துக்கொண்டு, அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களை வணங்கி, பெரும்புகழ் வாய்ந்த பேரரசர்க்கு ஏற்புடைய மனைகளையும், வா யி ல் க ைள யு ம், மண்டபங்களையும் வகைப்படுத்தி, இவ்விடங்களையெல்லாம் ஒருசேரவளைத்துக் கொண்டு உயர்ந்த நிலையினையுடைய மதிலகத்தே.

ஆணிகளும் பட்டங்களுமாகிய பெரிய இரும்பாலே கட்டிச்சாதிலிங்கம் வழித்து, தாழ்ப்பாளொடு சேரப்பண்ணின இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவுகளைச்சேர்த்து இணைதல் மாட்சிமைப்பட்டு, நடுவே திருமகளும், இருபக்கத்தும் இரண்டு செங்கழுநீர் மலர்களும், இரண்டுபிடி யானை களுமாகத் தன்னிடத்தே பண்ணி, உத்தரம் என்னும் நாளின் பெயர் பெற்ற சிறந்த மரத்தில் செருகப்பெற்ற கைத்தொழில் வல்ல தச்சன் கடவுகையினாலே, இணைப்பு எனும் குற்ை தீர்ந்து (அதவாது இணைப்பே தெரியாமல் பொருந்தி,) பல

92