பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரங்களும் தம்மில் கிட்டுதல் அமைந்த, வெண்சிறுகடுகு அப்பிவைத்த, நெய்ய அணிந்த, நெடிது உயர்ந்த நி ைல யி ைன உ ைட ய, வெற்றிகொண்டு ஏந்திய கொடிகளோடே யானைகள் சென்று புகும்படி உயர்ந்த, மலையைக் குடைந்து தி ற ந் த ல் போன்ற, உயர்ந்த கோபுரங்களையும், திருமகள் நிலையாகத் தங்கிவிட்ட, குற்றம் இல்லாத்தலையாய சிறப்பினையும், புதுமணல் பரப்பிய, அழகிய முற்றத்தினையும், நீண்ட மயிரினை உடைய கவரிமான்களில் துயநிறம் வாய்ந்த ஆண்கவரி மான்கள், கு று கி ய க ர ல் க ைள உடைய அன்னப் பறவைகளோடு தாவித்திரியும் வாசல் முன் இடத்தையும்

&- 68) L. ILI .

பந்தியில் நிற்றலை வெறுத்த, பற்பல தலையாட்டங் களை உடைய குதிரைகள் புல்லாகிய உணவைக்குதப்பும், தனிமையைப்புலப்படுத்தும் குரலோடு,அரண்மனை வாழ்வார் நிலவொளியின் பயன்கொள்ளும், நெடிய வெள்ளிய முற்றத்தில் உள்ள, மகரமீன் வடிவில் உள்ள பருத்த வாயினைக் கொண்ட கூடல்வாய் நிறைய, கலங்கி விழுகின்ற அருவியின் ஒசைகலந்து, அதற்கு அயல் இடத்தில், தழைத்த நெடிய தோகை அசைய மெல்லிய இயல்பினை உடைய, அழகால் செருக்குற்ற மயில்கள் ஆரவாரிக்கும், கொம்பு என்னும் இசைக்கருவி எழுப்பும் இசையோ என மயங்குதற்கு ஏற்ற இனிய இசை, பெரிய அடர்ந்த மலையின் ஆரவாரம் போல் ஆரவாரிக்கும் அரசன் பெருங்கோயில்.

யவன நாட்டவர் செய்த, தொழிலால் மாட்சிமைப்பட்ட பாவை, தன் கையில் ஏ ந் தி யி ரு க் கு ம் அழகிய அகல் நிறையும்படி நெய் வார்க்கப்பட்டுப், பெரிய திரிகளைப்

93