பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அரச மாதேவியார்

புலவர், அரசமாதேவியின் கட்டிலை மட்டும் காண வில்லை. அக்கட்டில்மீது கவலையே உருவாய் வீழ்ந்து கிடக்கும் அரசமாதேவியாரையும் கண்டார். அரசன் போர்க் கடமை மேற்கொண்டு பிரிந்துபோய் விடவே தனியே வீழ்ந்து கிடந்தார் தேவியார். தேவியாரின் அப்போதைய கோலம், புலவரைக் கண்கலங்கச் செய்துவிட்டது. தேவியாரைப் புலவர் இப்போதுதான்் புதிதாகக் காண்பவர் அல்லர். அரசனொடு அரசவையில் அரியனைமீது அமர்ந்திருந்த அழகுக் கோலத்தையும் கண்டவர். தேவியாரின் அன்றைய கோலத்தையும், இப்போதைய கோலத்தையும் காணவே அவர் கண் கலங்கிவிட்டது.

அப்போது தாங்கமாட்டாத அளவு முத்துவடங்கள் கிடந்த அவர் மார்பில், இ ப் போது, சிறுகயிற்றில் கோக்கப்பட்ட தாலி ஒன்றுமட்டுமே தொங்கிக் கொண் டிருந்தது. அழகிய நெற்றி, ஒப்பனை செய்யப்படாமையால். கலைந்துகிடக்கும் கூந்தலால் மூடப்பட்டிருந்தது. பேரொளி வீசும் மகரக்குழை அழகுசெய்த காதுகளில், சிறிய கடுக்கண் மட்டுமே அழுந்திக்கிடந்தது. கனத்த பொற்றொடி இறுகிச் செறிக்கப்பெற்றுத் தழும்பேறியிருந்த மு ன் ைக.க ளி ல், இப்போது வலம்புரிச் சங்கை அறுத்துப்பண்ணிய வளையும், தெய்வத் தீதுபோகக் கட்டும் மந்திரக்கயிறும் மட்டுமே கிடந்தன. வாளைமீனின் பிளந்த வாய்போன்ற மோதிரம் கிடந்து சிவப்பேறிய விரல்களில், இப்போது மங்கள மகளிர் அணியவேண்டிய நெளி என்னும் சிறு மோதிரமே செறிக்கப் பட்டிருந்தது. முன்பு பூந்தொழில் அமைந்த அழகிய உயர்ந்த

72