பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடை கிடந்து அழகு செய்த இடையில், இப்போது மாசேறிய ஆடையே கிடந்தது. இத்தகு ேக | ல த் ேத டு புனையா ஒவியம்போல, உறக்கம் இழந்து வீ ழ் ந்:து கி ட ந் த ர் தேவியார்.

அப்போது அழகிய சேடியர் சிலர் ஆங்கு வந்தனர். மாந்தளிர் நிறம் காட்டும்மேனி. அம்மேனியெங்கும் வேங்கைமலர் நிறம்காட்டும் மஞ்சள் நிறச் சுணங்கி. அழகிய மூங்கில்போல் திரண்ட மெல்லிய தோள்கள். கச்சால் இறுகக் கட்டப்பெற்ற வளர்ந்து வரும்முலை. வளைந்து மெலிந்த இடை. இத்தகு மெல்லியல் மகளிர் அவர்கள். வந்த மகளிர் தேவியார் சிறிதே துயில் கொள்ள மாட்டாரா? அவ்வாறு துயில் கொள்வதால் பிரிவுத் துயரைச் சிறிதே மறக்க மாட்டாரா என்று ஆசையால், தேவியாரின் பூண்கள் அணியப்பெறாத நல்லடிகளை மெல்ல வருடிக் கொடுத்தனர்.

சேடியர் வருடிக் கொடுக்கவும், தேவியார்க்கு உறக்கம் வந்திலது. பிரிவுத்துயர் அத்துணைக் கொடுமை உடைய தாயிற்று. அஃதறிந்தனர், தேவியார்க்கு உணவோடு, அறிவும் ஒ ழு க் க மு ம் ஊட்டிவளர்த்த செவிலித்தாயர். ஆண்டாலும் அறிவாலும் முதிர்ந்தவர்கள் அச்செவிலித்தாயர். அதை அவர்களின் நரைதிரை கலந்த கூந்தலே அறிவுறுத்தியது. அவர்கள் தேவியார் அருகே அமர்ந்து, பொய்யும் மெய்யும் கலந்த காரணங்களை அடுக்கடுக்காகக் கூறி, "வேந்தர் வினைமுடித்து இப்போதே விரைந்து வந்து சேர்வர், நின்துயர் ஒழிய’’ எனக் கூறித் தேற்றினர்.

ஆனால், அவர்கள் கூறியனவற்றில் எதுவும் தேவியார் காதுள் புகுந்ததாகவே தெரியவில்லை. அவை கேட்டு, அவர் உள்ளம் தேறியதாகவும் தெரியவில்லை. மாறாக அவர்கள்

73