பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேற்றத்தேற்ற, அவள் துயர்தான்் பெருகிற்று. மெளனமாகி விட்டான். அண்ணாந்து படுத்துக் கொண்டாள். அவ்வாறு படுத்துக் கொண்டவள், கண்முன் ஒருகாட்சி.

கட்டிலின் மேலே ஒரு திரைச்சீலை கட்டிலின், மகளிர் முலைபோலும் குடங்களை அடியில் கொண்ட, நான்கு கால்களிலும், கம்புகளைக்கட்டி அவற்றின் முனையில், வலித்துக் கட்டப்பட்டிருந்தது. அத்திரைச்சீலை. அதில் வண்ணவண்ண மெழுகினால், மேஷம் முதலான இருபத்தேழு ராசிகளோடு சென்று அலையும் ஞாயிறுபோல் அல்லாமல், உரோகிணி என்ற ஒரே ராசியோடு மட்டுமே நிலை கொள்ளும் திங்களின் ஓவியம் அழகுறத்தீட்டப்பட்டிருந்தது.

அவ்வோவியத்தில் வைத்த கண்ணை வ ங் கா ம ல்

பார்க்கப்பார்க்க, இந்த உரோகிணிபோல், வேந்தரை என்றும் பிரியாநிலை பெற்றிலமே என்ற மனக்கவலை முந்துறவே, அம்மனக்கவலையை, அவள் கண்கள் நீர் துளித்து வெளிப்படுத்தி விட்டன. பிரிவுத்துயரைப் பிறர்க்குப் புலப்படாவாறு காத்தலே கற்புடை மகளிர் கடமை. கண்ணிர்த்துளித்து, அக்கடமையில், தவறி விட்டோமே என்ற கவலையுறுத்தவே, தன் விரல் முனையால், அதைச் சுண்டி எறிந்து விட்டு மெளனியாகி விட்டாள். பிரிவுத்துயர் அவளை அத்துணை இன்னலுக்கு ஆளாக்கி விட்டது. அத்தோ! அரசமாதேவியார்! -

`... . . "ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து,

நன்னுதல் உலறிய சின்மெல் ஓதி நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்

வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்,

74