பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை : துணை துறந்து=அரசன் பிரிந்து போயிருப்பதினால். ஆரம்தாங்கிய அலர்முனை ஆகத்து=முன்பு முத்தால் செய்த ஆரம் கிடந்த பருத்த முலையினைக் கொண்ட மார்பில். பின் அமை நெடுவீழ் தாழ=பின்னிய கயிற்றில் கோக்கப்பட்ட

தாலி ஒன்றே தொங்க. நல்நுதல்=நல்ல நெற்றியில். உலறிய சில்மெல் ஓதி=படந்த சிலவாகிய மெத்தென்ற

மயிரினையும். நெடுநீர் வாழ் குழை களைந்தென=பெரிய ஒளி பொருத்திய

மகரக் குழை களையப்பட்டதாக. குறுங்கண் வாயுறை அழுத்திய காது = சிறியவாகிய கடுக்கண் அழுத்தப்பட்ட காதினையும், பொலம் தொடி தின்ற - முன்பு பொன்னால் செய்யப்பட்ட தொடி கிடந்து தழும்பு செய்து விட்ட. மயிர்வார் முன்கை = மயிரால் அழகு .ெ ச ய் ய ப் ப ட் ட

முன்கையில். வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து=வலம்புரிச் சங்கை அறுத்துப் பண்ணிய வளையோடு மந்திரக் கயிற்றையும் கட்டி. வாளைப் பகுவாய் கடுப்ப = வாளைமீனின் பிளந்த

வாயைப்போல, வணங்கு உறுத்து=முடக்கத்தை உண்டாக்கி, செவ்விரல்-சிவந்த விரல். கோளீஇய கேழ் விளக்கத்து = அ னி ந் து .ெ க | ண் ட

மோதிரத்தையும்.

76