பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு சொல்

வாசக நண்பர்கள், நான் வழிமறிப்பதற்காக மன்னிக்கவேண்டும். பொதுவாக என் படைப்புக்களுக்கு நான் முன்னுரைப் பீடிகை எதையும் போடுவதில்லை. என்றாலும், இந்த நாவலுக்கு, ஒரு சொல், சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்த நாவல், பிரபல வாரப்பத்திரிகையான தேவி”யில், தொடர்கதையாய் வெளிவந்தது. தொடர்கதை வேறு, நாவல் வேறு என்று மாறுபட்ட இந்தக் கால கட்டத்தில் இதை நாவல் வடிவாகவோ தொடர்கதை வடிவாகவோ, இன்றைய இலக்கியத் தமிழ்ப் பண்டிதர்கள் போல் டெக்னிக்கலாகப் பார்க்காமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கவே முயற்சி செய்திருக்கிறேன்.

நாட்டில் குறிப்பாக கிராமங்களில் நடைபெறும் அன்றாட அவல நிகழ்ச்சிகளில், நான் கேள்விப்பட்ட ஒசைப் படாத ஒரு நிகழ்ச்சிக்கு, யதார்த்தக் குறைவு ஏற்படாமல், கலைவடிவம் கொடுத்திருக்கிறேன். இந்தச் சமயத்திலும், ‘அந்த ’ நிகழ்ச்சியை நினைக்கும்போது, அதை எதிர்க்காமல், குற்றவுணர்வில், பேணா வீரத்தைக் காட்டியிருக்கிறேனே என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் அந்த நிகழ்ச்சி, சமூகத்தைப் பிடித்துள்ள ஒரு நோயின் அறிகுறி தானே அல்லாது, நோயல்ல என்று கருதியும், நோயை விரட்டினால், அறிகுறிகள் அடையாள மற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையோடும் உங்களிடையே, சோகத்தை சுவையாக்காமல், அதில் ஒரு தார் மீகக் கோபத்தையும், யதார்த்த சித்தரிப்பில், தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தாமல், எதிர்ப்புணர்வையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமூக அமைப்பின் போலித்தனம் புரியவைக்கப் பட்டிருந்தால், அப்போது