பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

நெருப்புத் தடயங்கள்

தமிழரசிக்கு, பேசிய ஏச்சும், கொடுங்கோலோச்சிய தடிகளும் கண்களில் பட்டன. கருத்தில் பதியமுடியாத வகையில், பிரம்மிப்பில் நின்றாள். இந்த மாதிரி கெட்ட கெட்ட வார்த்தைகளோடு, குனியக் குனியக் குட்டும் நிகழ்ச்சிகளை, அவள் போலீசாரிடம் இருந்து சிறிதும் எதிர் பார்க்காமல், நடப்பவைகளை அவளால் நம்பமுடியவில்லே. எங்கேயோ, ஏதோ, யாரோ, எவருக்கோ, எதையோ கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. பெயர் பிளாஸ்டிக்கை, சட்டைப்பையில் பதித்த சப்-இன்ஸ் பெக்டரும், முத்துலிங்கமும் நிற்பதுபோல் தோன்றியது. நிற்கிறார்களோ... நினைவுதானே?

தமிழரசி கைகளைத் தூக்கப்போனாள், முடியவில்லை.” உதடுகளைப் பிரிக்கப் போனள், இயலவில்லை. தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட, முதுகில் ரத்த ஊற்றுப் பீறிட்டுக் கிளம்ப, தலைமுடியை போலீஸ்காரர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு நிற்கும் சித்தப்பா போன்ற மனிதரையும், கிழிந்த ஜாக்கெட்டை மறைப்பது போல் ரத்தச் சதை திரண்டு, நெற்றியில் குங்குமத்திற்குப் பதிலாக ரத்தக் குவியலுடனும், காதுகளில் கம்மலுக்குப் பதிலாக ரத்தக் கட்டிகளுடனும், கைகளில் நொறுங்கிய வளையல்களுக்குப் பதிலாக, லத்திக் கம்பு பதிந்த தடயங்களுடனும், கலாவதிபோல் ஒரு உருவம் பார்த்தாள். இதற்குள் முத்துலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அவளிடம் கூட்டிவந்தார். “இவங்கதான்! நான் நேற்று சொன்னேன் பாருங்க தமிழரசி, அவங்க. ஒங்க பெரிய அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவங்க. நம்ம தாமுவை கட்டிக்கப் போற வங்க...” என்றார். பிளாஸ்டிக் அதிகாரி அவளுக்கு வணக்கம் போட்டார். பிறகு, காதலன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தால், அவள் தன்னையே மறந்து நிற்பதாக அனுமானித்து, அவளுக்கு ஒத்தாசை செய்ய வேண்டியது தனது கடமையென நினைத்து, மாடக்கண்ணுமேல் பாய்ந்தார். அந்த பைத்தியாரத் தர்மரை,