பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்றாவது உலகப் பரிசை நெல்சன் மண்டேலாவுக்கும் வின்னி மண்டேலாவுக்கும் கூட்டாக வழங்கியது.

பிரிட்டனின் ஹல் நகரத்தின் குடி உரிமை அவருக்கு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் போர்டியோ நகரைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின், லுடோவிக் ட்ராரியூ சர்வதேச மனித உரிமைப் பரிசு மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

இன ஒதுக்கலுக்கு எதிராகச் செயல்படும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களின் சங்கமான நைஜீரிய எழுத்தாளர்கள் சங்கம், மண்டேலாவை ஆயுள்காலப் புரவலர் என்ற பட்டமளித்துக் கெளரவித்தது.

பிரிட்டனில், மேற்கு யார்க்‌ஷயர் வட்டாரத்தைச் சேர்ந்த ஹட்டர்ஸ் பீல்டு நகரம், அங்குள்ள சொற்பொழிவாளர் அரங்கத்துக்கு நெல்சன் மண்டேலா அரங்கம் என்று மறுபெயரிட்டுப் பெருமை கொண்டது.

பிரேசில் நாட்டின் ரியோடி ஜனிரோ நகரின் குடி உரிமை அவருக்கு அளிக்கப்பட்டது.

பிரேசிலின் ரியோடி ஜனிரோ யுனிவர்சிட்டி ‘டிப்ளமா ஆஃப் ஹானர் அண்ட் ஃபிரண்ட்ஷிப்’ விருதை அவருக்கு வழங்கியது.

லண்டன் மாநகரில், ‘கிரேட்டர் லண்டன் கவுன்சில்’ எனும் மாநகர சபை நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை நிறுவியது. அதை ஆலிவர் டாம்போ திறந்து வைத்தார்.

செனகல் நாட்டின் தலைவர் அப்டு டையோயுப், ஸோ வெடோ சதுக்கத்தையும் நெல்சன் மண்டேலா சாலையையும், டாக்கார் நகரின் மையப்பகுதியையும், திறந்துவைத்தார்.

நைஜீரியா நாட்டின் அகமது பெல்லோ யுனிவர்சிட்டி சட்டத்துறைக்கான டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கியது.


வல்லிக்கண்ணன் • 65