பக்கம்:நெற்றிக்கண்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 நெற்றிக் கண்

பங்களாவிலும் காரிலும் கோயில் காளையாய்ச் சுற்றும் பல :உல்லாச இளைஞர்களுக்கு நடுவே முகம் மலரவோ, சிரிக் கவோ கூடத் தகுதியும் உற்சாகமுமில்லாததுபோல் பயந்து கூசிக்கூசி வாழ்ந்த தனது அந்த மாணவ வாழ்க்கையை அவன் ஒரு நாளும் மறந்துவிட முடியாதுதான். தானும் கெட்டுக் கொண்டே தன்னைச் சுற்றி ஒரு பத்துப் பன்னிரெண்டு விடலைகளுக்குக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து அவர்களையும் கெடுத்து வாழும் மாணவர்கள் சிலரை அப்போதும் அவன் கண்டிருந்தான். இப்போதும் கண்டு கொண்டிருந்தான். மாணவப் பருவத்திலேயே ஒரு கொழுத்த மிராசுதார் மனப்பான்மையோ அல்லது ஜமீன்தார் டாம்பீகமோ இப்படிப்பட்டவர்களுக்கு வந்து விடும். தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு பத்து மாணவர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் எவ்வளவு தண்டச் செலவு வேண்டுமானாலும் செய்வார்கள். இவர் களால் ஒரு விநாடிக்கூடத் தனியாயிருக்க முடியாது. தனி யாக எதையும் எதிர்கொள்ளவும் இவர்களுக்குத் துணி விராது. காபி குடிக்கவோ, சினிமா பார்க்கவோ, கடற். கரைக்குப் போகவோ, எதற்கும் அந்தப் பத்துப் பேர் கூட. வரவேண்டும். கொள்ளைக் கூட்டம் புறப்படுவதுபோல் சேர்ந்து கூச்சலிட்டு அரட்டையடித்து வெடிச் சிரிப்புச் சிரித்துப் பாதையோடு போகிற நாலு பெண்களைக் கேலி செய்து கொண்டும் போக வேண்டும், கல்லூரி வகுப்பில் ஐந்து பீரியட் என்றால் ஐந்து பீரியடுக்கும் அறைக்குப் போய் ஐந்துதரம் தலைவாரி ஐந்துதரம் சட்டை மாற்றிக் கொண்டு வகுப்புக்கு வரவேண்டும், இப்படி ஊர் மேய்கிற, இளைஞர்களைப் பார்த்துப் பயந்து கூசி, "நாளைய நல் வாழ்க்கை உண்மையில் இவர்களுக்குத்தான் ச்ொந்தமோ? நாம் இப்படியே ஏழ்மையில் நசுங்கி அழிய வேண்டியது தானா?” என்று அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டே விலகி இருந்து சிரிக்கப் பயந்து உல்லாசமாகச் சுற்ற நாணி ஒதுங்கிப் படித்த தன் பழைய நாட்களை நினைத்தான் 'சுகுணன். அன்றைய அந்த வாழ்வில் ஒரு தாகம் தன்னுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/124&oldid=590496" இலிருந்து மீள்விக்கப்பட்டது