பக்கம்:நெற்றிக்கண்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 129

உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோஷ் வந்திருந்த போது சுகுணனும் வேறு சில தன் மான மிக்க பத்திரிகையாளர்களும் தனியே கடற்கரையிலமர்ந்து உறையாடிக் கொண்டிருந்த வேளையில், இன்று பண முதலைகளால் நடத்தப்படும் பெரிய பெரிய பத்திரிகை களில் உண்மையாக வசதிகளையும் சொகுசுகளையும் அனு: பவர்கள் யார் தெரியுமா?’ என்று கேட்கப்பட்ட போது " அக்கார்டிங் டு மை ஸ்டாடிஸ்-டிக்ஸ் மோஸ்ட்லி தே ஆர் லோஃபர்ஸ் அண்ட்ஹையர் லெவல் பிம்ப்ஸ்...' என்று கோஷ் கொதிப்போடு பதில் கூறியிருந்ததை இப்போது நினைத்தான் சுகுணன். இந்தத் துறையைப் பற்றிய கசப் பான உண்மைகள் சுகுணனுக்குத் தெரிந்திருந்ததன் காரணமாகவே இதில் அவன் உள்ளம் பயமற்றுத் திடமாக இறுகித் துணிவோடு எந்தப் பொய்யையும் எதிர்த்து நிற்கத் தயாராயிருந்தது. போர் வீரனின் தைரியம் வேறு. அறிவாளிக்குத் தேவையான தைரியம் வேறு. அறிவாளியின் தைரியம் சத்தியத்தை அடிப்படை. பாகக் கொண்ட மடங்காத தைரியமாயிருக்க வேண்டும். சமூகத்தின் எந்த மூலையிலிருந்து யாருடைய நெற்றிக்கண் கொடுரமாகத் திறந்து வெதுப்பினாலும் 'குற்றம் குற்றமே என்று நிமிர்ந்து நின்று சொல்லுகிற தைரியமே அறிவாளி யின் தைரியம். இந்தத் தைரியம் அறிவாளியிடமிருந்து குறையக் குறைய உலகத்தின் அறிவியக்கமே போலியாகி விடும், போர் வீரனின் தைரியத்தைவிடப் புத்தி வீரனின் தைரியம் பல விதங்களில் உலகுக்கு அவசியமானது. புத்தி வீரனின் தைரியம் படிப்படியாகக் குறையக் குறையப் போர் வீரனின் தைரியமும் குறைந்து விடும் என்பது நீண்ட சிந்தனைக்குப் பின் சுகுணனின் முடிவாயிருந்தது. ஆனால் புத்தி வீரர்களாயிருக்க வேண்டிய பத்திரிகை யாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைத்த சூட்டோடு இங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் நினைத்தாலோ நெஞ்சில் இரத்தம் வடிகிறது. சினிமா தட்சத்திரங்கள் காய்கறி நறுக்குவதையும், சைக்கிள் விடு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/131&oldid=590503" இலிருந்து மீள்விக்கப்பட்டது